"தமிழினி மெல்லச் சாகும்.. வேறு யாராலும் அல்ல.., தமிழர்களாலேயே, அவர்களது அலட்சியத்தினாலேயே.."
சமீபத்தில் கோவை கொடிசியாவில் நடந்த கவிஞர் வைரமுத்துவின் அறுபதாம் ஆண்டு பிறந்த விழா நிகழ்வுகள் நடந்தேறின.... அப்போது அவர் ஆற்றிய உரையில் பிறந்த இந்தக் கருத்து நாமெல்லாம் மிகவும் கவனித்து அதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோமெனில் அது மிகையன்று..
முதற்கண் இந்தக் "கான்வெண்ட் " மோகம் எல்லாரது வசமும் தொலைய வேண்டும்.. குறைந்த பட்சம், குறைய வேண்டும்.. இப்போதைக்கு...! பின்னொரு நாளில் முழுதுமாகத் தொலைந்து.. தமிழ் கற்க பெற்றோர் தமது தங்கக் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்...
வயிறாற ஒருவேளை சோறுண்ணும் சூழல் கூட கனவாக இருக்கையில், தனது குழந்தையை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பதற்காக அண்டை வீடுகளில் கடனாகப் பெறுகிற அவலத்தினை யாதெனச் சொல்ல??
தமிழில் பேசுவது, படிப்பது, எழுதவது .. என்கிற எல்லா தன்மைகளுமே பெரிய வரவேற்பினைப் பெறாதது மிகப் பெரும் துரதிர்ஷ்டமே.. நமது நாட்டின் பிற மாநிலங்கள் யாவும் அவர்களது தாய்மொழியை இவ்வளவு துஷ்ப்ரயோகம் செய்வதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.. நாம் மாத்திரம் தான், தமிழை அதன் வழக்குகளை புறந்தள்ளப் பிரயத்தனிக்கிறோம் ... ஆங்கிலத்தை வெட்கமே அற்று வரவேற்கிறோம்..
ஒரு தமிழ் சொற்றொடரில், ஒரு பத்தியில் முழுதுமாக தமிழ் இருப்பதைக் காட்டிலும் அதனூடே ஆங்கிலத்தினை சேர்த்துப் புனைகிற சபலம் அறிவுப் பூர்வமான தமிழ் எழுத்தாளர்கள் வசம் கூட இயல்பாக மாறியிருப்பது மிகப் பெரும் அனாச்சாரம் ..
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றெல்லாம் வேண்டாம்.. நாம் எழுதுகிற தமிழில் உருப்படியாக தமிழை வீற்றிருக்கச் செய்வதே தமிழுக்கு நாமாற்றும் மிகப் பெரும் தொண்டு.. அதனை விடுத்து, தமிழுக்காகப் போராடுவது என்பதும், தமிழை வாழவைக்க உண்ணாவிரதம் இருப்பது என்பதும் அனாவசியப் போர்கள்..
எந்த மொழி நம்முட் புக நேர்ந்தாலும், தமிழுக்கென்று ஒரு பிரத்யேக தளத்தினை அமைக்க வேண்டிய மாண்பு தமிழன் என்கிற முறையில் நமக்கெல்லாம் மிகவும் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டியது இன்றியமையாத விஷயமாகும்..
"குத்துயிரும் குலையுயிருமாக குருதிப் புனலில் தத்தளித்துக் கொண்டிருக்கிற நமது தமிழை " நாமெல்லாம் ஒருங்கிழைந்து பெரியாஸ்பத்திரியிலாவது சேர்ப்பது அவசியம்.. பிறகு பார்ப்போம்.. பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்க..!!

சரியாகச் சொன்னீர்கள்...!
ReplyDelete