விவசாயி கண்ணீர்
துடைக்க விழுகிறேன்....
குழந்தைகளின்
சிரிப்பிற்காக
அழுகிறேன்..
அந்தப் பிஞ்சுக் கைகள்
விடுகிற காகிதக்
கப்பல்களை
கடலில் விடுகிறேன்..
என்னில் மூழ்கி
நனைய ஆசை கொள்கிற
எல்லா குழந்தைகளையுமே
ஏனோ அம்மாக்கள்
அடித்திழுத்து
அழவைக்கிறார்கள்...
வீடு வரமுடியாமல்
எனக்கென ஒதுங்கி
நிற்பவர்கள்
நான் நின்று விட்டேனா
என்று கைநீட்டிப் பார்க்கிறார்கள்..
இன்னும் பெய்கிறேன் என்றால்
அலுத்துக் கொள்கிறார்கள்.
வீட்டு ஜன்னல்களில்
கைகளை நீட்டுபவர்கள்..
பெய்கிறேன் என்றால்
குதூகலிக்கிறார்கள்..
குழந்தைக்கு வேடிக்கை
காண்பித்து சோறூட்டுகிறார்கள்..
நிம்மதிப் பெருமூச்சு
விடுகிறான் விவசாயி..
பொருமுகிறான் பொரி விற்பவன்..
இருமுகிறான் சளி பிடித்தவன்..
எத்தனை கால இடைவெளி விட்டுப்
பெய்தாலும்
"இந்த நாசமா போன மழை வேற!"
என்று திட்டுவதற்கு சிலர்
இருக்கத்தான் செய்கிறார்கள்..
தீக்கங்கை மேல கொட்ற மாதிரி
வெயில் அடிக்கிற போது மட்டும்
"இந்த நாசமாப் போன மழை
வருதான்னு பாரேன்!" என்று
அலுத்துக் கொண்டவர்கள் தான்
அவர்கள்...!!
விவசாயிக்கு மட்டும் அருமை பெருமை தெரியும்...
ReplyDeleteமழையின் வலிகளை வரிகளாக்கிய விதம் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி..
ReplyDelete