Skip to main content

Posts

Showing posts from February, 2014

நீங்களே ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள்..

நான்கு வரியில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற எண்ணத்தில் துவங்கி என்னையும் மீறி சகட்டு மேனிக்கு நீள்கிறது இந்த நய்யாண்டிக் கட்டுரை.., கவிதை என்கிற போர்வையோடு.. ..

சமீபத்திய என்னுடைய
பயமொன்று ...
நினைக்கவே
பயமளிக்கிறது.. !!

என்னுடைய
இத்தனை கால
பயங்களுக்கெல்லாம்
தலையாய பயம்
போல..
--இதற்கு
ஈடான பயமொன்று
முன்னர் முளைத்த
நாமதேயமே  இல்லை
போல...

பொதுவாகவே
அச்சம் மடைமை
என்பதை
ப.கோ.கல்.சுந்தரம்
சொல்லி எல்லாரும்
தெரிந்து வைத்திருக்கிறோம்..
அவ்விதமிருக்க
இதென்னடா புதுபயம்?

இத்தனை புதிர்
போட்டுத் தெரிவிக்கிற
தகுதி அந்த பயத்துக்கு
உள்ளதா என்பதும்
சந்தேகமே...!
--அந்த
பயத்தின் வீச்சு
என்போலவே கேட்கிற
யாவரையும் ஓர்
கலவரத்தில்
ஆழ்த்தக் கூடுமா
என்பதும் கேள்வியே..!!

நானுணர்ந்த விதமாக
யாவரும் உணர்வதில்
தான் என்னுடைய
உணர்வின் தகுதி
மேம்பாடு காண்கிறது..
அவ்வாறன்றி
நானொரு விதமாகவும்
இன்னொருவர் மற்றொரு
விதமாகவும் உணரக்
கூடுமெனில்
எனது உணர்வின்
பலவீனம் என்னை
மேலும் வெறுமையாக்கும்..

ஆனால்
இன்னொன்றும் இருக்கிறது..
நீ சொன்னதை
ஊர் ஏற்பது
என்பதும், ஊர் சொன்னால்
நீ அதனை ஏற்பதும்....
--இந்த யதார்த்த
சித்தாந்தத்தை மீறி
பு…

ஓர் சிறு திருத்தம்.

ஓர் சிறு திருத்தம்..

முந்தைய என்னுடைய இடுகையான "ஆண்களும் பெண்களும் -- சாட்டிங் கார்னர்".. எடிட் செய்து வெளியிட நினைத்திருந்தேன்.. ஆனால் அதற்குரிய பொறுமை இல்லை ஆதலால், அந்த இடுகையை நீக்கி விட்டேன்.. 

என்னவோ தெரியவில்லை, சற்றே யோசிக்கையில் அந்த இடுகையின் சாராம்சமும் நான் அதனை வார்த்தைப் படுத்திய விதமும் ஓர் இனம் புரியா அசூயை விளைவிக்கக் கூடுமோ என்கிற ஓர் சங்கடம் மனசை அரித்தமையால், தவிர்த்து விட்டேன்.. 

பாட்டும் ரசனையும்..

அவ்வப்போது பற்பல படங்கள் ரிலீசாகின்றன.. அவைகளினின்று பாடல்கள் வெளி வருகின்றன.. பாடல் சி.டி  யே  பட ரிலீஸ் போல வெளியிடப் படுகிறது..
முன்னொரு காலத்தில் இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள் இப்படி வெளி வருகையில் ஓர் திருவிழா போல கொண்டாடிய மலரும் நினைவுகள் மனசுள் நெளிகின்றன.. அப்படி கொண்டாடுவதற்கான அர்த்தங்கள் இருந்தன.. அவருடைய அந்தப் பாடல்கள் அப்படி தேன் வந்து பாய்ந்தது போல காதுகளில் பாய்ந்தன..

ஆனால் இன்றெல்லாம் அவ்விதம் எதுவும் இல்லை என்று அவசரக் குடுக்கை போல சொல்லி விடுவதற்கில்லை.... சினிமா தரங்களும் அதன் வீச்சான பாணிகளும் கதை அம்சங்களும் மிகவும் பிரம்மிக்க வைப்பது போலவே சில படங்களின் பாடல்களும் ஓர் புதுப் பரிமாணத்தில் பரிமளிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..

அந்தப் பிரத்யேகமான பாடல்கள் கேட்கிற எல்லாராலும் அவ்வித தன்மையோடு ரசிப்பதற்கு வாய்ப்பதில்லை என்கிற யதார்த்தம் தொன்று தொட்டு நிகழ்கிற விஷயம்..
மாற்று மாற்று ரசனையோடு, வேறு வகையான உணர்வுக் கலவைகளோடு அந்தப் பாடல்கள் அடையாளப் படுகின்றன..

உதாரணமாக என்னைக் கிறங்கடித்த பாடல் ஒன்று அதே கிறக்கத்தை மற்றொருவருள் விதைக்கக்  கூடுமா என்பது சந்த…

பாலுமகேந்திரா...

பாலுமகேந்திரா...
சினிமாவை அதீதம் நான் ரசித்து வந்த பிராயங்களில் மிகவும் என்னை ஈர்த்த இயக்குனர்... என்னை மட்டுமல்ல, அன்றைய சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன்வசப் படுத்திய தமிழகத்தின் சத்யஜித்ரே என்று சொன்னாலும் தகும்..

மென்மையும் மேன்மையும் ஒருங்கே இழையோடுகிற அவருடைய அந்தத் திரைக் கதை அமைப்புகளும் காட்சி அமைப்புகளும் ஓர் அற்புதக் கிறங்கடிப்பை  மனசுள் நிகழ்த்தும்.... நீலகிரி சென்று அவர் எடுத்த படங்கள் அனைத்தும் நம்மையும் அந்தப் பிராந்தியங்களில் உலவவிடும்..
அந்தப் பசுமையினூடே  நாமும் சுகந்தமாகப் பயணிக்கிற ஓர் மாயையைத் தோற்றுவிக்கும்.. !

நாம் பார்ப்பது மாட்னி ஷோவாகவே இருந்தாலும் வெளியே பழுத்த வெய்யில் அடித்துக் கொண்டிருந்தாலும், மின்விசிறி இல்லாமல் அரங்கினுள் வியர்த்து வழிந்தே கொண்டிருந்தாலும் .. இவருடைய படங்கள் நம்மை ஸ்வெட்டர் போட வைக்கும்..! அப்படி ஓர் பனித் தூவலாய் அப்படி ஓர் மழைத் தூறலாய் நம்மைக் குளிர்விக்கிற சாத்யக் கூறுகள் கொண்டிருந்தன..

இன்றெல்லாம் வெளியே குளிர் வாட்டி வதைத்தாலும் திரை அரங்கினுள் நம்மை வறுத்து எடுக்கிற விதமாக படங்கள் வருகின்றன.. என்ன தான் பற்கள் தந்தி அடித்துக் கொள்…

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும் ... சமீபத்திய தமிழ் சினிமாக்களில் இப்படி ஒரு ட்ரை இது வரைக்கும் யாருமே பண்ணியதில்லை என்று சொல்லலாம்.
அப்டி ஒரு அமைதியான சூழல்.., வழக்கமான கமெர்ஷியல் நெடி கிஞ்சிற்றும் அற்று ஓர் சுகந்த தென்றலை சுவாசிக்கிற சுவாரசியம் படம் நெடுகிலும்...

ஏதோ ஓர் சூழலில் அந்த லாகிரி தடை பட்டுவிடுமோ என்கிற உத்தேசமும் சந்தேகமும் மனசில் எழுந்த போதும், அப்படி எல்லாம் துவண்டு போக விடமாட்டோம் என்கிற விதமாக ஒருவகை மென்மை இழையோடுவதை ஆச்சர்யம் விழி பிதுங்க தரிசிக்க நேர்கிறது.. !!

இலக்கு ...

எனது சில 
ந[ண்]பர்களின் 
பட்டியலில் 
அவர்களோடு 
ஒப்பிடுகையில் 
நான் மிக 
சிறந்தவன் என்கிற 
ஆணவம் 
அனாவசியம் 
என்கிற போதிலும் 
அதென்னவோ ஓர் 
சுவாரசியம்..!!

அப்படியாக 
எனது பட்டியலில் 
இடம் பெற்ற 
எல்லாரது 
சுய அபிப்ராயங்களும் 
தரவரிசையில் 
என்னைப் போலவே தான் 
அவர்களே 
முன்னிலை வகுப்பர் 
என்பதில் ஐயப் பாடென்ன?...

"எனக்கு நாந்தேன் 
பெரிசு" என்கிற 
யதார்த்த இறுமாப்பு..!!

மற்றவனைப் புரட்டிப் 
போட்டுப் பின்னுக்குத் 
தள்ளிவிடுகிற அவசரம்.., 
தான் மட்டுமே 
முன்னின்று கொடி 
நாட்ட வேண்டுமென்கிற 
வெறி, வேகம் 
--பண்பற்ற 
மனிதப் பண்பு..!

தோற்ற வலிகளில் 
துவண்டிருப்பவனை 
முன்னுக்கு நிறுத்த 
வேண்டுமென்கிற 
மாண்பு 
என்றைக்கு முளை 
விடுகிறதோ 
அன்றைக்குத் தான் 
துவங்குகிறது 
இந்த உலகம்..!!

காதல் கிறுக்கன்.. கிறுக்குக் காதலன்..

நீ ஞாபகம்
வருகையில்
மட்டுமே எனக்கு
கவிதை புனைகிற
சாமர்த்தியம் வருகிறது.. !

மற்றவற்றை
மற்றும் மற்றவர்கள்
எவர் குறித்த
பிரக்ஞைகளும்
கவிதைகளுக்கான
சமிக்ஞைகளாகப்
புரிபட்டாலும்
வார்த்தைகள் புலனாவதில்லை..!!

ஆனால் உன்
முகம் பிரசன்னமான
ஷணம் தொட்டு
கசிய ஆரம்பித்து
விடுகிறது என்
கவிதை ஊற்று...

பிற்பாடாக
பிரளயம் எடுக்கிறது
கவிதை..
எழுதுகிற எனது
பேனா முனையே
தெறித்தோடி விடுகிற
புயல் மையங்கொண்டு
விடுகிறது எனது
விரலிடுக்கில்..!

நான் மரணமடைந்து
இரண்டு மணி நேரம்
ஆகியிருக்கும் பொருட்டுக்
கூட.. அங்கே
நீ வந்து என்னை
ஸ்பரிசிக்கும் சாத்தியம்
உள்ள பட்சத்தில்
சிலிர்த்துக் கிடக்கிற
என் கட்டை
சூடுணரக் கூடிய
வாய்ப்பு 99 சதவிகிதம்
இருப்பதாக
ஆய்வறிக்கை சொல்கிறது..

மிச்சமுள்ள
1 சதவிகிதம்
உமது வருகையின்
நிமித்தம் மூர்ச்சையாகி
இருப்பேன் என்று
சொல்கிறது
இந்தக் கிறுக்குப் பயபுள்ள.. !!

ஓ மை டெத்.... ஐ லவ் யூ...ஹிஹி

சிலருக்கு  ஓர் பிரம்மாத சூழல் அமைந்து நமக்கது வாய்க்காத போது, காலத்தின் நயவஞ்சகம் பெரிதாகப் புரிந்த மாதிரி ஓர் காழ்ப்பு..
நமது பலவீனங்களுக்கு, நமது நோய்வாய்ப் பட்ட தன்மைகளுக்கு .. சற்றும் சம்பந்தப் படாத காலத்தினை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற அவசரம் அநியாய அனாவசியம்...

காலமென்கிற மாயையிடம் நமக்கோர் பக்தி இருக்க வேண்டுமேயன்றி, அதனை ஓர் பரமவைரி போல சித்தரித்துப் பார்க்கிற அசிங்கம் நேர்ந்து விடக் கூடாது..

எத்தனைப் பெருந்துன்பம் நேர்கையிலும் காலம் அதைப் புரிந்து விட்டதாக அனுமானிக்கிற போக்கு நம்மில் விலக வேண்டும்.. நமது ஆளுமையில் காலத்தினை வசீகரமான அடையாளமாக வைத்திருக்க வேண்டுமேயல்லாது,  மசை பிடித்த நாயைப் போல கருதி கல்லடிக்கக் கையோங்கக் கூடாது.

எல்லாருக்குமான அற்புதங்களும் அசிங்கங்களும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து.. அற்புதம் நிகழ்ந்தவருக்கு அந்த நேரம் நல்ல நேரமாகி, அசிங்கம் நிகழ்ந்தவருக்கு அதே நேரம் கெட்டு விடுகிறது... இந்த யதார்த்தம் எல்லாருக்குமான அன்றாட நிகழ்வு. 

புத்தகக் கண்காட்சி...

ரெண்டொரு நாட்கள் முன்னர் எங்கள் ஊரில் நிகழ்ந்து வருகிற புத்தகக் கண்காட்சிக்கு செல்ல நேர்ந்தது..

நூற்றுக் கணக்கான கடைகள் எங்கிலும் அடுக்கி வைக்கப் பெற்றிருந்த லட்சக் கணக்கான புத்தகங்களை  ஆயிரக் கணக்கான பேர்கள் வந்து வந்து தரிசிப்பதை பார்க்கையில் புத்தகங்களின் மீதான மக்களின் பேராதரவை மிகவும் ரசிக்க முடிந்தது..

அவர்களினூடே நானும் புத்தகங்களை ஆர்வமாக மேய அவா கொண்டு மேய்ந்தேன்.. என்னை ஈர்த்த சில புத்தகங்களை எடுத்து அங்கங்கே சில பக்கங்களை நுனிப் புல்  மேய்வது போல மேய்ந்து பொழுதோட்டுவது பேரானந்தம்.. விலை போட்டு வாங்குகிற சாசுவதம் இல்லாத பு.க்களை சற்றே ஆர்வம் சீறிட வாசிக்கிறேன்.. வாங்குகிற சாத்ய விலைகள் உள்ள பு.க்களை "அதான் வாங்கப் போறோமே.. வீட்ல போயி படுத்துட்டே படிச்சுக்கலாம் " என்று அவைகளை வாசிப்பதை தவிர்த்து... ஹிஹி.. வாங்குவதையும் தவிர்த்து மறு கடைக்குத் தாவினேன்..
என் மாதிரியான அற்ப குணம் நிறைந்தவர்கள் பலரையும் என்னால் அடையாளம் காண முடிந்தது.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கொப்ப..!!

பாதி விலை போட்டு விற்பனை செய்கிற பழைய பு.கடைகளுக்கு சென்று புத்தகம் வாங்கவே பேரம் பேசுகிற ச…