Friday, February 14, 2014

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும் ... சமீபத்திய தமிழ் சினிமாக்களில் இப்படி ஒரு ட்ரை இது வரைக்கும் யாருமே பண்ணியதில்லை என்று சொல்லலாம்.
அப்டி ஒரு அமைதியான சூழல்.., வழக்கமான கமெர்ஷியல் நெடி கிஞ்சிற்றும் அற்று ஓர் சுகந்த தென்றலை சுவாசிக்கிற சுவாரசியம் படம் நெடுகிலும்...

ஏதோ ஓர் சூழலில் அந்த லாகிரி தடை பட்டுவிடுமோ என்கிற உத்தேசமும் சந்தேகமும் மனசில் எழுந்த போதும், அப்படி எல்லாம் துவண்டு போக விடமாட்டோம் என்கிற விதமாக ஒருவகை மென்மை இழையோடுவதை ஆச்சர்யம் விழி பிதுங்க தரிசிக்க நேர்கிறது.. !!

ஆர்ப்பாட்டமில்லாத அப்பட்டமான அப்பாவி பண்ணையார்.. ஜெயப்ரகாஷ்.. வாவ் போட வைக்கிறார் மௌனமாகவே.. பால்ய நண்பர் ஒருவரின் நிமித்தம் அங்கே வந்து சேர்கிற பியட் பத்மினி கார்.. அது அங்கேயே இருந்து... நமக்கெல்லாம் அளிக்கிறது 2-அரை மணிநேர விருந்து..

விஜய் சேது.. மச்சான் அவார்டுகளுக்குக் குறி எதுவும் வைக்க வேண்டியதே இல்லை.. அவார்டுகள் இவரைக் குறி வைத்து வந்து வந்து விழும்.. அம்புட்டு யதார்த்தம்.., அம்புட்டு நேர்த்தி.. சினிமா உலகிற்கு வி.சே ஒரு பெரிய வரம்..
தய செஞ்சு பு.சாலித்தனமா செய்றதா நெனச்சுக்கிட்டு யாரும் முப்பது ரூபா dvd  வாங்கி பார்க்காதீங்க.. பாவம் விகடன்ல வேணா மார்க் ரொம்புமொ என்னவோ டிக்கட் கல்லா காத்து வாங்குது..

ஆரம்பத்துல இருந்தே தரமான படங்களுக்கு மக்கள் அளிக்கிற ஆதரவு இம்புட்டு தான்..
வெந்தும்  வேகாம இருக்கற அற வேக்காட்டு சனியங்களுக்குத் தான் உய்ந்து உய்ந்து ப்ளாக் ல டிக்கட் வாங்கிகினு வருவாங்க. இந்த மாதிரி படங்கள ப்ரீயா காட்னா கூட மொகறைய சொய்ங்னு அப்பால திரும்பிக்குவாங்க..

இன்னொருவாட்டி பாக்கலாம்னு ஐடியா பண்ணிக்கினு இருக்க இருக்கவே ங்கொய்யாலே, வந்துடிசய்யா நம்ப இஸ்டாலின் ஸன் படம்.., இன்னாது..,இது கதிவேலன் காதலோ  இன்னாவோ.. அதுக்கு இப்பிருந்தே விஸில்  சும்மா ங்குய் ங்குய் ன்னு பறக்குது.. 

1 comment:

  1. இன்றைக்கு ரசனை அப்படி... என்னத்த சொல்ல...? ம்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...