Wednesday, February 19, 2014

பாட்டும் ரசனையும்..

அவ்வப்போது பற்பல படங்கள் ரிலீசாகின்றன.. அவைகளினின்று பாடல்கள் வெளி வருகின்றன.. பாடல் சி.டி  யே  பட ரிலீஸ் போல வெளியிடப் படுகிறது..
முன்னொரு காலத்தில் இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள் இப்படி வெளி வருகையில் ஓர் திருவிழா போல கொண்டாடிய மலரும் நினைவுகள் மனசுள் நெளிகின்றன.. அப்படி கொண்டாடுவதற்கான அர்த்தங்கள் இருந்தன.. அவருடைய அந்தப் பாடல்கள் அப்படி தேன் வந்து பாய்ந்தது போல காதுகளில் பாய்ந்தன..

ஆனால் இன்றெல்லாம் அவ்விதம் எதுவும் இல்லை என்று அவசரக் குடுக்கை போல சொல்லி விடுவதற்கில்லை.... சினிமா தரங்களும் அதன் வீச்சான பாணிகளும் கதை அம்சங்களும் மிகவும் பிரம்மிக்க வைப்பது போலவே சில படங்களின் பாடல்களும் ஓர் புதுப் பரிமாணத்தில் பரிமளிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..

அந்தப் பிரத்யேகமான பாடல்கள் கேட்கிற எல்லாராலும் அவ்வித தன்மையோடு ரசிப்பதற்கு வாய்ப்பதில்லை என்கிற யதார்த்தம் தொன்று தொட்டு நிகழ்கிற விஷயம்..
மாற்று மாற்று ரசனையோடு, வேறு வகையான உணர்வுக் கலவைகளோடு அந்தப் பாடல்கள் அடையாளப் படுகின்றன..

உதாரணமாக என்னைக் கிறங்கடித்த பாடல் ஒன்று அதே கிறக்கத்தை மற்றொருவருள் விதைக்கக்  கூடுமா என்பது சந்தேகம் தான்..
அதனைக் கேட்டு நான் எனக்கு நிகழ்ந்த காதலோடு எனக்கு நிகழ்ந்த ஏக்கங்களோடு, ஏமாற்றங்களோடு .. இன்னபிற வார்த்தையுள் சிக்காத வகையறா உணர்வுகளோடு ஒப்பிடப்பட்டு ரசிப்பதில் எனக்கு அந்தப் பாடல் எடுபட்டுவிடுகிறது சுலபத்தில்.. மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் விதத்தில் அந்தப் பாடலின் வீரியம் என்னை மிகவும் பாதிக்க நேர்கிறது..

ஆனால் அதே பாடல் எந்த சுரணையுமற்று, வெறுமனே முணுமுணுகிற தகுதி கூட இழந்ததாக இன்னொருவருள் அடையாளப் பட்டு விடுகையில் எனக்கோர் தேவையற்ற தாழ்வு மனப்பான்மை துளிர்க்க நேர்கிறது.. அல்லது, அந்த நபரைக் காட்டிலும் எனது ரசனை மிகவும் மேம்பட்ட விதமாக என்னுள் ஓர் அனுமானத்தை ஏற்படுத்துகிறது..

இப்படியாக கறுப்புவெள்ளையில் துவங்கி ஈஸ்ட்மேன் கலர் படங்களின், மற்றும் அதனைத் தாண்டிய இன்றைய நவீன பாணிப் படப் பாடல்கள் வரை பற்பல படப் பாடல்கள் இதே விதமாக என்னில் ஊடுருவி என்னை இம்சித்து வருகின்றன.. என்னைப் போலவே அனைவருக்கும் இப்படியான ஓர் பிரத்யேக அனுபவங்கள் இந்தப்  பாடல்கள் விஷயத்திலே நேர்ந்த வண்ணமே இருக்கக் கூடும்..

சினிமா என்கிற ஓர் நிழல் மீடியா ஏற்படுத்துகிற தாக்கம் தான் மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதென்று  உணர்கிறேன்.. மற்ற எந்த அலைவரிசைகளும் ஏற்படுத்தாத ஓர் பிரத்யேக உணர்வுக் கிளர்வுகளை இந்த சினிமா .. அறிமுகமான நாள் தொட்டு ஏற்படுத்தி வருகிறது என்பதில் கிஞ்சிற்று  ஐயங்களும் எவர்க்குமில்லை....!

ஆரோக்கிய சூழல்களும் சீரழிவுகளும் சரிவிகிதமாக.. 

2 comments:

  1. நம் ரசனையை நாம் முதலில் ரசிக்க வேண்டும் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்...!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...