Saturday, February 15, 2014

பாலுமகேந்திரா...

பாலுமகேந்திரா...
சினிமாவை அதீதம் நான் ரசித்து வந்த பிராயங்களில் மிகவும் என்னை ஈர்த்த இயக்குனர்... என்னை மட்டுமல்ல, அன்றைய சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன்வசப் படுத்திய தமிழகத்தின் சத்யஜித்ரே என்று சொன்னாலும் தகும்..

மென்மையும் மேன்மையும் ஒருங்கே இழையோடுகிற அவருடைய அந்தத் திரைக் கதை அமைப்புகளும் காட்சி அமைப்புகளும் ஓர் அற்புதக் கிறங்கடிப்பை  மனசுள் நிகழ்த்தும்.... நீலகிரி சென்று அவர் எடுத்த படங்கள் அனைத்தும் நம்மையும் அந்தப் பிராந்தியங்களில் உலவவிடும்..
அந்தப் பசுமையினூடே  நாமும் சுகந்தமாகப் பயணிக்கிற ஓர் மாயையைத் தோற்றுவிக்கும்.. !

நாம் பார்ப்பது மாட்னி ஷோவாகவே இருந்தாலும் வெளியே பழுத்த வெய்யில் அடித்துக் கொண்டிருந்தாலும், மின்விசிறி இல்லாமல் அரங்கினுள் வியர்த்து வழிந்தே கொண்டிருந்தாலும் .. இவருடைய படங்கள் நம்மை ஸ்வெட்டர் போட வைக்கும்..! அப்படி ஓர் பனித் தூவலாய் அப்படி ஓர் மழைத் தூறலாய் நம்மைக் குளிர்விக்கிற சாத்யக் கூறுகள் கொண்டிருந்தன..

இன்றெல்லாம் வெளியே குளிர் வாட்டி வதைத்தாலும் திரை அரங்கினுள் நம்மை வறுத்து எடுக்கிற விதமாக படங்கள் வருகின்றன.. என்ன தான் பற்கள் தந்தி அடித்துக் கொள்கிற வகையிலே a/c  போட்டாலுமே கூட சுரணை அற்ற கதைகளும் திரைக் கதைகளும் நம்மை வெறுப்பில் ஆழ்த்தி  உப்புசம் அடிக்க வைக்கிற சூழலை ஏற்படுத்தித்  தான் விடுகின்றன... சில படங்கள்... அதற்கென வேறு ஆன்லைனில் 20 ரூ. சேர்த்து  120ரூ கொடுக்க வேண்டி ஆகி விடுகிறது.... இந்த உப்புசமும் சேர்ந்து கொள்கிறது.. !!

1 comment:

  1. இயக்கிய படங்கள் குறைவென்றாலும் மறக்கவே முடியாது...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...