Skip to main content

Posts

Showing posts from September, 2016
நீ தரும் --

தொண்டை நனைக்கிற 
தீர்த்தமே.. 
என் தாகத்தை தீர்க்குதே..!

சோளப்பொரி தான் போடுறே..
யானைப் பசி இங்கு தீருதே ..!!

உன் ஒற்றை வியர்வைத் துளியில் 
இங்கு நடக்குது என் குளியல்.. 


நடுப் பகல் பௌர்ணமி குளிர்விக்க
இரவினில் தெரியுது வானவில்..  
இந்தக் காதல் கலவரத்தில்.. !

[சினிமா பாடல் புனைகிற சாதுர்யத்தை இன்னும் நான் புரிந்து கொள்ளவில்லை.. சற்றே பயிலும் பட்சத்தில் பல்லவி சரணத்தை இணைக்கிற சாமர்த்தியத்தை சுலபத்தில் பெறுவேன் என்று நம்புகிறேன்.. 
மேற்கிறுக்கப் பட்ட அந்தப் பாடலானது ..இன்று எனக்குள் முணுமுணுக்கப் பட்டது..  மறந்து விடுவேனோ என்கிற சந்தேக அவசரத்தில் உடனடி நிகழ்வாக பிளாகிலும் முகநூலிலும் பதிந்து விடுகிறேன்..
அர்த்தம் ரசிக்கிற வகையில் உள்ளனவா என்று நீங்கள் அபிப்பிராயம் சொன்னால் உதவிகரமாக இருக்கும்.. ]

சிரிக்கமுடியாத நகைச்சுவை..

நன்கு பரிச்சயமானவரின் 
அகால மறைவு 
க்ஷணங்கள் சில 
துணுக்குற வைத்து.. 
பிற்பாடாக வருகிறது 
ஒரு ஆசுவாசம்.. 

எவருக்கும் இது 
புது நிகழ்வன்று.. 
ஏதோ ஒரு தருவாயில் 
எல்லாருக்குமான 
திடுக்கிடல்.. 
எல்லாருக்குமான 
ஆசுவாசம் .. 

மறுபடி உடன்கட்டைமுறை 
பிரகடனப் படுத்தப்படும் 
பட்சத்தில் ..
சென்ற பிறப்பில் 
அவ்விதம் மாண்ட 
இப்பிறவிப் பெண்டிர் கூட 
துடைப்பமும் காலணியும் 
உயர்த்திப் போர்க்குரல் 
எழுப்பக் கூடும்.. !!

எல்லாருக்கும் தெரியும் 
துயரம் சில நாட்கள் என்று.. 
அதன்பிறகு அவ்வப்போது 
வருகிற இறந்தவர் ஞாபகத்தை...
சற்றே அழுது .. 
கண்ணீரில் சுண்டி எரிந்து விடலாம்...!

துயர் சில நாட்களே 
என்று புரிந்து விடுகிற நமக்கு 

சில நொடிகளே 
நீர்க் குமிழ் எனப் 
பருத்து வெடித்து விடக்கூடியவை 
சந்தோஷங்கள் என்பன 
என்பதும் தெரியாமல் இல்லை...!

அடர்த்திமிகு மரணத்தின் முன்னர் 
மிக சுலபத்தில் நீர்த்து 
விடும் தன்மை கொண்ட 
இந்த வாழ்வின் மீதான பிரக்ஞை 
மிகவும் அடர்த்தியாயிருப்பது 
முரண்பட்ட .. மற்றும் 
சிரிக்கமுடியாத நகைச்சுவையாக 
நமக்குள் அமிழ்ந்து கிடக்கிறது.. !!

ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்..

பிச்சைஎடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. 
உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோல்வி காண்பான்.. 

"காலு கையி நல்லா தானே இருக்கு?.. ஏதாச்சும் வேலை செஞ்சு பொழைக்க தெரியாதா?.." என்றொரு கேள்வி, எவரேனும் ஏதோ ஒரு தருவாயில் கேட்க நேரும்.. 

அப்படியான கேள்வி முதலில் சற்றே உறைத்து.. உழைக்கிற ஆயத்தத்துக்குப் போக வைத்தது சேகரை.. 

ஆனால் உடலின் வனப்பு, அவனது ஈன இதயத்திடம் தோல்வியுற்றது.. ஒருக்கால் பிச்சைத் தொழிலை துவங்கிய புதிதில் இந்தக் கேள்வி அவனிடம் தொடுக்கப்  பட்டிருக்குமாயின் லஜ்ஜை அவனுள் பீடித்து .. எங்கேனும் பீடி சுற்றவாவது கிளம்பி இருப்பான்.. ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அப்படியொரு கேள்வி அவன் தொழில் துவங்கி பத்தாம் மாதம் தான் அவனிடம் கேட்கப் பட்டது.. மாதங்கள் பத்து ஆகிவிட்டதில், அவனுள் கருவுற்றிருந்த பிச்சைக் குழந்தை நன்கு வளர்ச்சி பெற்று அபார்ஷன் தகுதியை இழந்து விட்டிருந்தது.. 

ஆகவே சுகப் பிரசவமாக அவனுக்கு அவனது பிச்சைக் குழந்தை பிறந்தது.. 

அதனை வளர்த்து வாலிபம் பண்ணவேண்டிய தாய்மையும் தந்தைமையும் ஒருங்கே அவனுக்கு கடமையாக்கப் பட்டிருந்…

பிண ஊர்வலப் பூக்கள்..

உன்னை மறப்பதற்கான  
பயிற்றுவிப்பில் இருக்கிறேன் 
என் இதயத்துக்கு...!

ஒரு போலீஸ் நாய்போல 
உன் நினைவினை 
மோப்பம் பிடித்துக் 
குரைத்துக் கொண்டே 
கிடக்கிறது எந்நேரமும்.. !!

எனது வெற்றிகரமான 
ஒருதலைக் காதல் 
என்றோ காலாவதியாகி 
விட்டதென்கிற தீர்மானத்தில் 
அமைதியாகி விட்டிருந்த 
அதே இதய நாய்.. , 
எதற்காக மறுபடி 
உமது சுவடுகள் குறித்த 
குமுறலில் குரைக்க வேண்டும் 
என்பதே கேள்வி...!

நாயெனக் குரைக்கிற 
அதே இதயம் தான் 
அப்படியொரு அறிவுப் பூர்வக் 
கேள்வியையும் தொடுக்கிறது...!

ஒரு பரிமாணத்தில் 
ஏங்கியும் , மற்றொரு 
பரிமாணத்தில் ஆறுதலளித்தும் 
அந்நியன் விக்ரம் 
போன்று ஸ்பிலிட்டெட் 
பெர்சனாலிட்டி கொண்ட 
காதலில் தோற்ற 
கோடிக் கணக்கான 
இதயங்கள் இந்தப் 
பிரபஞ்சமெங்கிலும் 
சிதறிக் கிடக்கின்றன 
பிண ஊர்வலப் பூக்கள் போல.. !!


கோபக்காரன் கவிதை..

எனக்குள் கதறி 
சப்தமெழுப்பும் 
என் மௌனங்களும்.. 
எங்கோ சென்று 
அடங்கிக் காணாது 
தொலையும் எனது 
சப்தங்களும் .. 

மௌனங்களையோ 
சப்தங்களையோ 
எதன் பொருட்டும்
தவிர்ப்பதற்கில்லை 
என்பதோடு .. யாவும் 
அதனதன் பயணிப்பில் 
நகர்த்துகின்றன நம்மை.. !

க்ஷணநேர ரௌத்திரத்தில் 
அண்டை அயலாரிடம் 
நாம் பதிந்து வைத்திருந்த 
மேன்மை மென்மை என்ற 
தன்மைகளை -- மிக 
சுலபத்தில் இழக்கிறோம்.. 

 ஒரு கூப்பாடுக்குப் பிற்பாடு 
முந்தைய நாசுக்கை மறுபடி 
புதுப்பிப்பது என்பது  
செத்தாலும் நடவாது.. !
இருப்பினும் மெனக்கெடுகிற 
நம்மைக் கண்டு 
நமட்டாக சிரிக்கிற அவர்களைப் 
பார்க்கையில்... 
மேற்கொண்டு பிஸ்தாவாகவே 
வலம்வரத் தீர்மானம் 
கொண்டுவருவோம்.. !!

குற்றமே தண்டனை .. [பட விமரிசனம்}

விதார்த்தின் எதார்த்த நடிப்பை சொல்வதா.. மணிகண்டனின் நாசுக்குத் திரைக்கதை, மற்றும் காமெராவை சொல்வதா.. அவ்வப்போதைய இளையராஜாவின் தென்றல் வருடலை சொல்வதா.. 

ஒரு கொலை.. அதனை எவர் செய்திருப்பார் என்று ஊகிக்க திரை பிம்பத்தில் மொத்தப் பேரும் தடுமாற,  கவனிக்க வந்த கொட்டகை ரசிகர்களும் அதே தடுமாற்றங்களுக்கு உள்ளாகின்றனர்.. 

நிழல்கள் அங்கே  ஊகிப்பது போன்றே இங்கே நிஜங்களும் ஊகிக்க நேர்ந்தது மணிகண்டனின்  திறமைமிக்க திரைக்கதையால்.. !

2வது வரிக்குக் கூட தேவைப் படாத ஒற்றை வரிக் கவிதை இது.. 
அந்த ஒற்றை வரியிலும் மரபுக் கவிதையின் சந்தங்களும் நேர்த்திகளும் ஒருங்கிழைந்த பேரழகில் வார்த்திருப்பது தமிழ்ப் படங்களுக்கு மிக அந்நியம் மற்றும் புதியது.. 

இந்த நிகழ்வுக்கு சீராக விம்முகிற ஒரு இசையை ராஜா தவிர எவர்க்கும் சாத்தியம் இல்லை என்கிற மாயை மேலோங்குகிறது.. 

பார்வை குறைபாடு என்பது நமக்கே கண்ணைக் கட்டுகிறது .. 
விதார்த்தின் வாழ்க்கை நிலை போன்றே அந்த அப்பார்ட்மெண்டின் வீடும்.. அங்கங்கே அறுந்து தொங்குகின்றன.. 
ஷூட்டிங் முடிகிற வரைக்குமாவது இடிந்து விழாமல் இருந்ததே.. என்று ஆறுதல் பெருமூச்சை விடவைத்தது.. 
தம்மடித்துக் கொண்டு,…

ஈஷா யோகா மய்யம்.. [சன்யாசிகளின் பெற்றோர் சார்பாக..]

சமீபத்தில் ஈஷா-வில் நிகழ்ந்துள்ள விஷயங்கள் அதனை சார்ந்தவர்கள் மட்டுமின்றி இன்னபிறரும் அறிந்திருக்கக் கூடுமென்று அனுமானிக்கிறேன்..
எனக்குமே கூட ஈஷாவில் லயித்திருப்பது பிடித்தமானது.. அந்த ரம்மிய மலைசூழ் பிராந்தியத்தில் எப்படிக் கிடந்தாலும் ஏற்றுக் கொள்கிற பாங்கில் மனசிருக்கும்.. செருப்பினை பைகளில் அவர்கள் பெற்றுக் கொள்வதில் துவங்கி, குளியலறை, கழிவறை என்று அனைத்தும் பக்தி வாசம் பிரவகிக்கிற தன்மையில் தான் மேலோங்கி இருக்கும்..
அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அந்த சந்திரகுண்ட சூரியகுண்ட குளியல் குளங்கள்..
முடித்துவிட்டு அந்த பிரம்மாண்ட சிவலிங்கம் முன்னர் கண்மூடி அமர்ந்து சற்றே தியானித்து .. விபூதி அணிந்து கொண்டு விடைபெற்று ..பிறகு பின்புறம் அமைந்துள்ள லிங்க பைரவி கோவில் சென்று ஆராதித்துவிட்டு குங்குமம் வாங்கிப் பூசி வந்துவிடுவேன்..
பின்னர் அவர்கள் பிரசாதமாக வழங்கும் எள்ளுருண்டை கறுப்பிலும் வெள்ளையிலும் மாறி மாறி ரெண்டையும் வெறிகொண்டு தின்று விடுவது என் சுபாவம்.. வீட்டிற்கென்று சில உருண்டைகள் வாங்கி வைத்துத் கொண்டாலும், அவைகளும் திரும்பப் பயணிக்கையில் அவ்வப்ப்போது கிள்ளிக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்…