Wednesday, September 7, 2016

குற்றமே தண்டனை .. [பட விமரிசனம்}

Image resultவிதார்த்தின் எதார்த்த நடிப்பை சொல்வதா.. மணிகண்டனின் நாசுக்குத் திரைக்கதை, மற்றும் காமெராவை சொல்வதா.. அவ்வப்போதைய இளையராஜாவின் தென்றல் வருடலை சொல்வதா.. 

ஒரு கொலை.. அதனை எவர் செய்திருப்பார் என்று ஊகிக்க திரை பிம்பத்தில் மொத்தப் பேரும் தடுமாற,  கவனிக்க வந்த கொட்டகை ரசிகர்களும் அதே தடுமாற்றங்களுக்கு உள்ளாகின்றனர்.. 

நிழல்கள் அங்கே  ஊகிப்பது போன்றே இங்கே நிஜங்களும் ஊகிக்க நேர்ந்தது மணிகண்டனின்  திறமைமிக்க திரைக்கதையால்.. !

2வது வரிக்குக் கூட தேவைப் படாத ஒற்றை வரிக் கவிதை இது.. 
அந்த ஒற்றை வரியிலும் மரபுக் கவிதையின் சந்தங்களும் நேர்த்திகளும் ஒருங்கிழைந்த பேரழகில் வார்த்திருப்பது தமிழ்ப் படங்களுக்கு மிக அந்நியம் மற்றும் புதியது.. 

இந்த நிகழ்வுக்கு சீராக விம்முகிற ஒரு இசையை ராஜா தவிர எவர்க்கும் சாத்தியம் இல்லை என்கிற மாயை மேலோங்குகிறது.. 

பார்வை குறைபாடு என்பது நமக்கே கண்ணைக் கட்டுகிறது .. 
விதார்த்தின் வாழ்க்கை நிலை போன்றே அந்த அப்பார்ட்மெண்டின் வீடும்.. அங்கங்கே அறுந்து தொங்குகின்றன.. 
ஷூட்டிங் முடிகிற வரைக்குமாவது இடிந்து விழாமல் இருந்ததே.. என்று ஆறுதல் பெருமூச்சை விடவைத்தது.. 
தம்மடித்துக் கொண்டு, ஜன்னல் திரைகளை சன்னமாக விலக்கி வெளி நபர்களை மேய்வது, கிழிந்த 10 ரூ நோட்டை, பருக்கை சோற்றைக் கொண்டு ஒட்டி விடுவது, அந்த அவிந்த வீட்டிற்கு அபார்ட்மெண்ட் ஓனரம்மா வாடகை கேட்கையில் ... கம்பெனியில் இன்னும் சம்பளம் போடவில்லை.. போட்டதும் தந்துடறேன் ... என்று சொல்வது, -- விதார்த், விஜய் சேதுபதி , குருசோமசுந்தரம்  பட்டியலில் சேர்ந்து கொள்கிறார்.. 

ரஹ்மானின் அந்த மேனரிஸம் , அன்று புதுப் புது அர்த்தங்களில் கண்டது போன்றே ஜொலிப்பாயிருப்பது ஆச்சர்யம்.. போலீஸ் விசாரணையின் போது , அந்தப் பதற்றம், பம்முவது, போலீசாரின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வது போன்று நடந்து கொள்வது .. விதார்த்திடம் அவ்வப்போது செக் போட்டுக் கொடுப்பது என்று .. வெரி மெச்சூர்டு எக்ஸ்பிரஷன்களை அள்ளி வீசியுள்ளார் ரஹ்மான்.. 

காக்காமுட்டை ஐஸ்வர்யா.. விதார்த்துக்கு ஜோடியாகிற அந்த அலுவல் ஏழைப் பணிப்பெண் .. இருவரும் தங்களின் பாகங்களை மிகப் பாங்காக மெருகூட்டி உள்ளனர்.. 

இன்னுமென்ன சொல்ல.. ஸ்லோ மூவி தான்.. 
அனைவரும் திரை அரங்கு சென்று காண்க.. சுலபத்தில் ப்ளூ ரே ப்ரிண்டில் கூட இந்த மாதிரி படங்கள் அவசரமாக வெளிவந்து விடும்.. ஆனால், இப்படியான கலைஞர்களை ஊக்குவிப்பது நம்முடைய தலையாய கடமையாகும்.. 

திருட்டு டிவிடி யில் கவனித்து விட்டு, "வாவ் .. வாட் எ மூவி" என்று அலப்பறை செய்வதை விடுத்து, "என்னடா இது . கொஞ்சம் ஸ்லோவா இருக்கு.. " என்று அலுத்துக் கொண்டாவது ஒரு நூறு ரூபாயை இவர்களுக்கு அளித்து விட்டு வாருங்கள்.. குறைந்து போக மாட்டீர்கள்.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...