உந்தன் நிமித்தம்
"ஒருதலைக் காதலன் "
தகுதி எமக்கு
சுலபத்தில் வாய்த்தது..
இருதலைப்படுத்தும்
முஸ்த்தீபு எதுவுமற்று
ஏக்கத் தீயின் லாகிரியில்
லயித்துக் கிறக்கம்
கொண்டிருந்தேன்..
பூங்காக்களிலும்
கடற்கரைகளிலும்
காதலர்களைக் கண்டு
மௌன நகைப்பில்
மூழ்கினேன்....
-ஏனெனில் ..
பரஸ்பரம் காதலிப்பவர்கள்
ஒருதலை ஏக்கங்கள்
பரிச்சயமற்றிருப்பார்கள்...!
காதலி பூங்கா வர
தாமதிக்கிற போதும்,
மனைவியாகி ..
பிரசவத்திற்கு அம்மா
வீடு போகிற போதும்
நிகழ்கிற
அற்ப ஏக்கங்களுக்கு
நிகராகாது ...
காதலியே கிடைக்காமல்
ஏங்கித்திரிகிற
ஒருதலைக்காதலின்
வீரியம் ததும்பும்
ஏக்கங்களின் முன்னர்.. !!
No comments:
Post a Comment