பாப்பாவின் குறும்பு
எனக்கும் மனைவிக்கும்
ரத்தக் கொதிப்பேற்றும்..
முதுகில்அறைந்து விடுவதும்
கால்களுக்குக் கீழே
நறுக்கென்று கிள்ளி
விடுவதும் எங்கள்
தண்டனை முறைகள்...
முதுகில் என் மனைவி
அறைகையில்
அவளை நான் கண்டிக்கிற
தருணங்களும்
கால்களுக்குக் கீழே
நான் கிள்ளுகையில்
மனைவி என்னைக்
கண்டிக்கிற தருணங்களும்
வாய்ப்பதுண்டு...
அவள் அறைவதும்
நான் கிள்ளுவதும்
பரஸ்பரம் ஆட்சேபங்கள்
எதுவுமற்று கூட
அவ்வப்போது நிகழும்..
ரகளையின் சூடு
பாப்பாவிடம் அப்படி
இருக்கும்...
பிந்தைய தருணமொன்றில்
எங்கள் இருவராலும்
கொஞ்சப் படுவாள்..
எங்கள் முத்தங்களில்
ஈரமாகி கசங்கிப் போவாள்...
தீவிர ரகளையில்
இருவரிடமும்
தாக்குதலுக்குட்பட்டு ..
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அப்படியே தூங்கிப்
போகிற போது மட்டுமே
நாங்களிருவரும்
அதிகம் கலங்கிப்
போக நேர்கிறது..
ஒவ்வொரு தருவாயிலும் ...!!
!
நல்ல வரிகள்... ரசித்தேன்...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…