Friday, August 3, 2012

உங்களுக்கும் இப்படி எல்லாம் தோன்றுமா?

நூறு கமெண்ட்ஸ் வந்துவிட்டதே பரவாயில்லையே என்று வியந்து அந்த நபருடைய கமெண்ட்ஸ் column த்தைப் பார்த்தால் நூற்றுக்கு எண்பத்தாறு கமெண்ட்ஸ் அந்த நபரே பிதற்றியிருப்பார்... பார்க்கவே இசி மிதித்த உணர்வை மனசுள் பரப்பும்... இது என்ன மானம்கெட்ட தனம் என்று அரற்றும்... ஆனால் இப்போது எனக்கே அது நிகழ்ந்தது போல ஓர் அசூயைக் கிளர்கிறது... ஆம்.., ஓர் சிறு கவிதைக்கு பிரசுரமாகி இருக்கிற எட்டுக் கமென்ட்டில் என்னுடையதே மூன்று நான்கு இருக்கிறது..., வெறுமனே நன்றி நவிலல் கமெண்டில் சேர்ந்து விடுகிறது... ஆனால் நம்மை மனதாரப் பாராட்டிய ஒரு மனிதனுக்கு நன்றி தெரிவிக்கிற ஓர் சாதாரண தன்மை கூட இல்லை என்றால் பிளாக் எல்லாம் எதற்கு எழுதணும் என்கிற கேள்வி மனசுள்...

புகழ் எனக்கு இஷ்டம் எனிலும் , அது குப்பை போல குவிய வேண்டுமென்கிற பேராசை இல்லை... ரெண்டொருவர் என்னை அங்கீகரிக்கிற சந்தோஷமே அலாதி எனக்கு...
மற்றொன்றையும் தெரிவிக்க விரும்புகிறேன்... இந்தக் காலப் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீதாக வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கைகளும், தங்கள் வாரிசுகள் பல துறைகளில் பிரம்மாதமாக, பிரம்மாண்டமாக ஜொலிக்க வேண்டுமென்கிற பேரவா பரவலாக இன்று எல்லார் வசமும் ஓர் மனவியாதி போல வியாபித்து விட்டிருக்கிறது..

விஜய் டிவி யில் குழந்தைகள் பாடுகிற நிகழ்வுகளைப் பார்க்கிறேன்... மிக நேர்த்தியாகப் பயிற்றுவிக்கப் படுகிறார்கள் குழந்தைகள்... அவர்களது திறன்களைத் தீர்மானிக்க தலைமை வகிக்கிற பிரபலப் பாடகர்கள்.. அந்தப் பாடுகிற குழந்தைகளை , அவர்களது பாடுகிற திறமைகளை விலாவாரியாகப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.., மேற்கொண்டு எவ்விதம் அவர்களது திறன்களை பிரகாசிக்கச் செய்வதென்கிற டிப்ஸ் கொடுக்கிறார்கள்.., ஆனால் அப்போதைக்கு அவர்களுக்கு அங்கீகாரம் தாற்காலிகமாக மறுக்கப் படுகிறது... அதனை ஏற்க மனதற்று அந்தக் குழந்தை தேம்பித் தேம்பி அழுகிறது... அவர்களது பெற்றோரின் முகங்களும் தற்கொலைக்கு முயல்பவர்களின் பாவனையோடு இம்சை காண்பிக்கிறார்கள் முகங்களில்..

அந்தப் பிரபல பாடகர்களின் அபிப்ராயங்களும் சாடுதல்களும் தங்களுக்கு ஓர் திருத்திக் கொள்கிற சந்தர்ப்பமாக ஏற்கப் படவேண்டுமேயன்றி, மிகக் கேவலப்பட்டு விட்டது போலவும் மேற்கொண்டு இந்த வாழ்க்கையே வாழத் தகுதியற்றது போலவும் எதற்கு ஓர் சீன் போட்டுக் காட்ட வேண்டும் அந்த விஜய் டிவி காமெராக்கள்? இதையெல்லாம் வர்ணித்து ஓர் சோக உரை ... அதனூடே ஓர் தந்தி அறுபட்ட சோபை இழந்த இசை... 

இப்படியெல்லாம் சூழல்களை சிருஷ்டித்து என்னத்தை சாதித்துக் கிழிக்கப் போகிறார்கள் இவர்கள் எல்லாரும்?, அதாகப் பட்டது, இதனைத் தொகுக்கிற நிகழ்ச்சித் தொகுப்பாளர், மத்யஸ்தம் செய்கிற பிரபலப் பாடகர்கள்... குழந்தைகள் இப்போதே சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்கிற தாகம் தொனிக்கிற பேராசைப் பெற்றோர்கள்.. இன்னபிற இவை சார்ந்த கலைஞர்கள்.. எல்லாரும்?..

கொஞ்சமேனும் லஜ்ஜைகள் கற்றாக வேண்டும் இவர்கள் யாவரும்... 
நன்றி..


4 comments:

  1. கமெண்ட்ஸ் பற்றி எப்போது நீங்கள் யோசித்தீர்களோ அப்போதே உங்கள் மனம் (என்னைப் பொறுத்தவரை) சஞ்சலப்பட ஆரம்பித்து விட்டது... விட்டுத் தள்ளுங்கள்... ப்ளாக் எழுதுவது நமது வாழ்வின் மிகச்சிறிய பகுதி...

    எல்லாம் பணம் செய்யும் மாயம்...
    சில குழந்தைகளைப் பார்த்தால் கஷ்டமாக தான் இருக்கிறது... அவர்களை சொல்லி குற்றமில்லை... பெற்றோர்களின் பேராசை... ஒளி பரப்பும் தொலைக்காட்சிக்கு நல்ல காசு...

    ReplyDelete
  2. நண்பருக்கு மனித மனதின் இயல்பு ஆசைகளையும் புகழையும் ஆர்வத்தோடு எதிர்பார்ப்பது இதில் யாரும் விலக முடியாது ..........அளவு வேண்டுமானால் கூடவும் குறையவும் செய்யும் .....
    ஒவொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இருந்தால் மட்டுமே உலகம் சுழலும் .........அப்படி இல்லை நான் ஞானி என்று சொல்லுபவர்கள் நிச்சயம் மனம் பிறல்ந்தவர்கல்தான் அவர்கள் ஆசைகளை உள்ளே அடக்கி வைத்துகொண்டு வெளியே வேஷம் போடுபவர்கள் ...........ஆகவே இயல்பாய் இருங்கள் நீங்கள் நீங்கலாக இருங்கள் என் பதிவை படித்தால் உங்களுக்கு புரியும் நான் கருத்தை வரவேர்ப்பவள்
    http://kovaimusaraladevi.blogspot.in/2012/07/blog-post_1030.html

    ReplyDelete
  3. கருத்தியெல்லாம் எதிர்பார்த்து எழுத ஆரம்பித்தால் எழுத்தின் தனித்தன்மையே போய்விடும், உங்கள் வழியில் நீங்கள் தொடருங்கள், உங்களுக்கென ஒரு நட்பு வட்டாரமோ வாசகர் வட்டாரமோ உருவாகும்பொழுது உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்.

    ReplyDelete
  4. I had inserted all your great ideas, mr.danpal, ms.sarala and mr.nightsky.. thank u all very much..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...