சுயம் என்கிற தலைப்பில் எனது நிலைப்பாடு குறித்து அவ்வப்போது ரெண்டொரு பக்கம் கிறுக்கி விடலாம் என்றொரு ஆசை..
ஏனெனில் எனது மனப்பான்மை இன்னதென்கிற தெளிவு எனக்கே இன்னும் பிடிபடாத புதிராக என்னில் ஊடுருவிக் கிடக்கிறது.. இந்த சுயம் என்கிற தளத்தில் எனது சரிதத்தை நான் திணிக்க முயல்கையில், என்னுடைய மன அரிப்புக்களும், என்னுடைய அபிப்ராயங்களும் வெளியேறுவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்.. நன்றி..
நான் பலவீன எழுத்தாளன்?
எழுதுகிற அநேகம் பேர்கள் இப்படித்தானா?..
ஏதேனும் எழுத முற்படுகயிலும் கூட , இன்னது எழுதலாம் என்கிற கரு'வற்று வெறுமே எழுதத்துவங்கி பிற்பாடு, போகிற போக்கில் அசந்தர்ப்பமாக பிடிபடுகிற கரு'வைத் திணித்து, என்னவோ பல மாதங்கள் நெஞ்சினுள் சுமந்து, எழுத்தில் இப்போது தான் இறக்கி வைக்கிற பாவனையில்...
----மற்ற எழுதுகிற நபர்கள் எவ்விதமோ அறியேன், நான் எண்பது தொண்ணூறு சதவிகிதம் எழுதுகிற லட்சணம் இப்படி மட்டுமே தான்..!!
-இந்த திடீர் பாய்ச்சலில் ஓர் மேன்மையும் ஆற்றலும் ஓர் விபத்தாகக் கூட தென்படுகிற சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது பதிலற்ற கேள்வி தான்..
-இதையும் தாண்டி சிற்சிலர் புகழ்வதை ஏற்றுப் புளகித்து ஓர் மெல்லிய குற்ற உணர்விலும் என் இதயம் மிதக்க நேர்வதுண்டு..
-
முன்னர் நான் சொன்னது போல -சில சதவிகிதங்கள் மாத்திரமே- நெடு நாட்கள் மனசுக்குள் சுமந்த விஷயங்களை எழுத்தில் இறக்கி வைக்கப் பிரயத்தனிக்கையில் ... மனசுள் படிந்துள்ள அந்த கெட்டித் தன்மை, அந்த இலக்கிய வீச்சு, - பிரசவமாகிற என் எழுத்துக்களில் மிளிராதது என் எழுதுகிற திறனை என்னையே சந்தேகப் பட வைக்கிற சமாச்சாரமாகும்..
போகிற போக்கில் தென்பட்டு எழுதகிற விஷயங்களின் வீரியம் கூட, திட்டமிட்டு எழுப்புகிற சம்பவங்களுள் படியாதது எனது எழுதுகிற திறனிலுள்ள ஓர் நீர்த்த தன்மையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கக் கூடும்..?...
நன்றி..

அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteதிண்டுக்கல் தனபால் அவர்களுக்கு..
ReplyDeleteதங்களின் தீராத அன்பில் நிறைந்து வழிகிறது என் இதயம்... எனது ஒவ்வொரு பதிவிற்குமான உங்களது அயராத பின்னூட்டம் என்னுள் மிக்க இன்பம் பயக்கிறதெனில் அது மிகையன்று..
நான் திண்டுக்கல் வரும் எண்ணம் உள்ளது.. தேய்பிறை அஷ்டமிக்கு பைரவரை வணங்க தாடிக்கொம்பு மிக விசேஷம் என்று பலரும் சொல்லக் கேள்வி.. அது குறித்து ஓர் குறிப்பிட்ட அந்நாளினை எமக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்... அப்படியே தங்களையும் சந்திக்கிற வாய்ப்புக் கிட்டும் பட்சத்தில் மிக்க மகிழ்வேன்..நன்றி..