Skip to main content

Posts

Showing posts from August, 2015

ஜாலியோ ஜிம்கானா..

தக்காளி மாதிரி தங்கமும் தூக்கி வாரி அடித்து விளையாட நேர்ந்தால்?
வாவ்.. கற்பனையே கம்பீரமாக இருக்கோல்லியோன்னோ ?
அதுசரி, தங்கமும் இந்த மாதிரி வந்துச்சுன்னா அப்றமா வேற எதைத் தான் வேல்யூ உள்ளதா வச்சுக்கறதாம் ??
இப்ப குப்பையா கெடக்கற ஜல்லிக் கல்லு பத்தாக்குறையா மாறி, கிராம் 3000 ன்னு மாறிடப் போறதா யோசிங்கோ.. 
காதுல கையில கழுத்துல நெத்தியில இடுப்புல ன்னு எங்க பார்த்தாலும் டிஸைன் டிஸைனா கருங்கல் ஜல்லி பளீர்னு மின்னாமப் போயிடுமா என்னா ?

"குமரன்  ஜல்லி ஸ்டோர்ஸ்".. "ஜாய் ஆலுக்காஸ் ஜல்லி மாளிகை"  "கல்யாண் ஜல்லீஸ்" 

'கல் டிசைன் நல்லா இருக்கா?'
'சூப்பர்.. இதே மாதிரி நானும் வெங்கச்சான் கல்லுல செஞ்சு  போடலாம்னு இருக்கேன்.. '
'ஐயோ அது இன்னும் ரேட் கூட வருமே டி? 
'வரட்டும்.. இந்தக் கஸ்மாலம் செஞ்சு போடட்டும்.. பக்கத்து வீட்டு பரமேஷ் , எதுத்தாப்புல இருக்கற விக்கி இவுங்க எல்லாம் பித்தளைல பைக் வாங்கி ஓட்டறாங்க. இந்த தரித்திரம் இன்னும் தங்க சைக்கிளையே வச்சுக்கிட்டு நம்ம  மானத்த வாங்குது.. போதாக் குறைக்கு ஹெட் லைட்டை வைரத்துல செஞ்சு போட்டிருக்கு.. எவ்வளவோ சொன்னேன்…

ரகசிய அலறல்கள்..

அறியாமையின் சுவடுகள் அனைவரின் வசமும் பத்திரமாக நிறைவு வரைக்குமாக பயணம் செய்யும் அவர்களோடு...!
 பகுத்தறிவுகளும் மன முதிர்ச்சிகளும் ஓரிழையில் நுழைந்து விடுமெனிலும் அந்த அறியாமையின் மழலைமை நம்மில் தவழ்ந்த வண்ணமே ஒருவகை சுவாரஸ்யம் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கக் கூடும்.. !

சில விஷயங்கள் இன்னும்  உருவமாக, இன்னபிறவாக நம்மோடு இருக்கும்.. சில விஷயங்களோ, பொருள் தன்மை இழந்து இதயத்துள் நினைவாக வியாபித்து வீற்றிருக்கக் கூடும்..

என்னிடம் பொருள் சார்ந்து நிறைய அறியாமைகள் குவிந்து கிடக்கின்றன.. ஆம், எமது இளம்பிராயம் தொட்டே, எதனையேனும் கவிதை என்றும், கதை என்றும், கட்டுரை என்றும் நான் மெனக்கெட்டுப் புனைந்தவை எல்லாம் .. அன்றைய எமது "அறியாமை" என்கிற மலரும் நினைவுகளாகத் திரண்டு கிடக்கின்றன இன்று..

இன்றைக்கு முளைத்திருக்கிற சிறு அறிவொன்று அவைகளை ரகசியமாக கேலி செய்து ஒரு நமட்டுச் சிரிப்பை உதடுகளில் உதிர்க்கச் செய்கின்றன..

ஆனால் மிக வியப்பாக அந்தப் பிராயங்களிலுமே கூட இன்றைய ஆழ்ந்த சிந்தனைகளுக்கு ஒப்பாக சிலவற்றை சிந்தித்து நான் எழுதி இருப்பது என்னைப் பொருத்தமட்டில்  உலகின் ஏழு அதிசயங்களோடு இணையப் பெறுக…

உடலுயிர்..

உள்வீசும் 
உயிர்க்காற்றில்... 
இலை என 
அசைகிறது 
உடல்....!

உயிர் ஊற்றில் 
கடல் எனத் 
ததும்பும் உடல்..

பிறகு 
உயிர்க் கிளி 
பறந்ததும் 
பழுத்த இலை 
என உதிரும் 
உடல்..!!

தயவு செய்து யாரும் என்னை எழுப்பி விடாதீர்கள்..

உன்னிடம்
தொலைவதிலுள்ள
சுவாரஸ்யம்
எனக்கு நான்
கிடைப்பதில்
இருப்பதில்லை.. !

தனிமைப் பட்டுக்
கிடப்பதாக
எனக்கு நானே
வதந்தி பரப்பிக்
கொண்டிருந்தேன்..
உமது தோளில்
தலை சாய்க்கும்
திட்டங்களோடு..!!

அடங்கா மிருகம்
என்றொரு அடையாளம்
எனக்குண்டு..
ஆனால்
உன் மடி வந்து
சேர்கிறேன்
மொசு மொசு முயல்குட்டியாய்.. !

என் தலை
வருடுமுன் விரல்கள்
பிடித்துச்  சொடுக்கப் பார்க்கிறேன்..
அதற்குள்ளாக
நித்திரைக்குள்
மூழ்கச் செய்து
மூர்ச்சையாக்குகிறாய்..!!

நீ தந்த துயில் கலைக்க
எவர்க்கும் உரிமை இல்லை..
நீயே விழிக்கவும் வை..

இது தாண்டா வாழ்க்கை..

இது தாண்டா வாழ்க்கை.. 
இந்தப் புகைப்படம் பார்க்கையில் இப்படிக் கதறுகிறது மனது.. . ஹிஹி.

1000 கிலோ முரண்கள்..

எந்த மனிதனை 
சிருஷ்டிக்கவும் 
கடுகளவு கல்லைக் 
கூடப் பிரயோகிக்கவில்லை 
கடவுள்.. 

ஆனால் 
கற்களை மட்டுமே 
கொண்டு 
கடவுள் சிருஷ்டிக்கப் 
படுகிறார் 
மனிதனால்..!!

ஐயோ.. வுட்டுட்டமே...!

ஆபாச இணையதள முடக்கம், மதுவிலக்குப் போராட்டம்.. 
வாவ்.. இப்டி எல்லாம் அட்டட் டைம்ல பிரச்னை வரும்னு தெரிஞ்சிருந்தா, ஒரு நாலஞ்சு கேஸ், பீர், பிராந்தி ஒயின் ன்னு வகைக்கொண்ணா ஸ்டாக் பண்ணி இருக்கலாம்.. 
அப்புறம், செம கிக்கான பார்ன் வீடியோஸ் bunch ஆ டவுன்லோட் பண்ணி அசத்தி இருக்கலாம்.. 

இப்டி சபலம் எல்லாம் சகஜம் என் மாதிரி சபலபுத்திக் காரங்களுக்கு.. 
சென்ட் ஆயிரம் ரூபாய்க்குக் கூவிக் கூவி வித்த இடங்கள் எல்லாம் இன்னைக்கு சென்ட் 7 லட்சம் கொடுக்க ரெடியா இருந்தாலும், வெய்டிங் ல இருந்தாக வேண்டிய நெருக்கடி நிரம்பி விட்டது.. 

அன்றைக்கு நினைத்திருந்தால் ஐம்பதாயிரம் புரட்டி அரை ஏக்கரா வாங்கிப் போட்டிருக்கலாம்.. இன்றைக்கு அரை சென்ட் டுக்கே தகிடு தத்தோம் போட வேண்டி உள்ளது.. 

விட்டதைப் பிடிப்பதென்பது பெரும்பாலான தருவாய்களில் எவருக்குமே சாத்தியப் படுவதில்லை.. ஆனால், பிடித்திருக்கலாமே சுலபமாக என்கிற கேவல்கள் நெஞ்சை அடைக்கும் விதமாக பிரசன்னமாகி இம்சிக்கின்றன.. 

நடக்கிற நல்லது கெட்டது எதற்கும் நம்முடைய முயற்சிகள் பொறுப்பாகா.. ஆயினும் எவை நடப்பினும் நமது நிமித்தமே என்கிற அனுமானங்கள்.. நமக்கு  நிகழ்கிற யாவும், நம்மைய…