Monday, August 3, 2015

ஐயோ.. வுட்டுட்டமே...!

பாச இணையதள முடக்கம்,துவிலக்குப் போராட்டம்.. 
வாவ்.. இப்டி எல்லாம் அட்டட் டைம்ல பிரச்னை வரும்னு தெரிஞ்சிருந்தா, ஒரு நாலஞ்சு கேஸ், பீர், பிராந்தி ஒயின் ன்னு வகைக்கொண்ணா ஸ்டாக் பண்ணி இருக்கலாம்.. 
அப்புறம், செம கிக்கான பார்ன் வீடியோஸ் bunch ஆ டவுன்லோட் பண்ணி அசத்தி இருக்கலாம்.. 
Image result for get cheated and cryingImage result for get cheated and crying
இப்டி சபலம் எல்லாம் சகஜம் என் மாதிரி சபலபுத்திக் காரங்களுக்கு.. 
சென்ட் ஆயிரம் ரூபாய்க்குக் கூவிக் கூவி வித்த இடங்கள் எல்லாம் இன்னைக்கு சென்ட் 7 லட்சம் கொடுக்க ரெடியா இருந்தாலும், வெய்டிங் ல இருந்தாக வேண்டிய நெருக்கடி நிரம்பி விட்டது.. 

அன்றைக்கு நினைத்திருந்தால் ஐம்பதாயிரம் புரட்டி அரை ஏக்கரா வாங்கிப் போட்டிருக்கலாம்.. இன்றைக்கு அரை சென்ட் டுக்கே தகிடு தத்தோம் போட வேண்டி உள்ளது.. 

விட்டதைப் பிடிப்பதென்பது பெரும்பாலான தருவாய்களில் எவருக்குமே சாத்தியப் படுவதில்லை.. ஆனால், பிடித்திருக்கலாமே சுலபமாக என்கிற கேவல்கள் நெஞ்சை அடைக்கும் விதமாக பிரசன்னமாகி இம்சிக்கின்றன.. 

நடக்கிற நல்லது கெட்டது எதற்கும் நம்முடைய முயற்சிகள் பொறுப்பாகா.. ஆயினும் எவை நடப்பினும் நமது நிமித்தமே என்கிற அனுமானங்கள்.. நமக்கு  நிகழ்கிற யாவும், நம்மையும் தாண்டி நிகழ்வன .. நேரம் காலம் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்பனவெல்லாம் நம்முடைய ஆதங்கக் கூப்பாடு அன்றி வேறென்ன? 

உடலை உயிர் விட்டு நழுவும் இயல்பான நிகழ்வு கூட, காலத்தின் சதி செயல் போன்ற பிரம்மை நமக்கெல்லாம்.. 

மரணத்தை நிறுத்துகிற, தவிர்க்கிற, வெல்லுகிற .. திறன்கள் மட்டும் மனிதகுலத்துக்குக்  கடவுள் வழங்கி இருக்கும் பட்சத்தில், கடவுளையே ரத்தம் சதையோடும், புண்களோடும் வலிகளோடும் வந்து நிறுத்தி விடுவான் மனிதன். 


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...