Wednesday, May 28, 2014

மோடி

இப்ப மாத்திரம் மோதி வலது கையை ஜோதிடர்கள் பார்த்தாங்கன்னா போதும்.. சும்மா விலாவாரியா அவரோட விஷயங்களை புட்டுப் புட்டு .வைப்பாங்க.

"வாவ்.. இந்தக் கை, கண்டிப்பா இந்த இந்திய தேசத்தை தன்வசப் படுத்தத் தான் போகுது" என்பார்கள்..
"சந்தேகமே இல்லை.. ஒரு காலத்துல டீ ஆத்துன இந்தக் கை, இனி இந்தியாவை ஆத்தப் போகுது" ன்னு சொல்வாக..

சாயா சாயா ன்னு ரயில்  நிலையத்துல கூவிக் கூவி வித்தப்ப "இந்தப் பய தான் இந்தியாவை ஆளப் போறான்னு தெரிஞ்சிருந்தா எவனாச்சும் டீ குடிக்காம இருந்திருப்பானா?..
"நஹி.. நஹி.. சலோ .. டோண்ட் டிஸ்டர்ப் " என்று எத்தனை நாய்கள் விரட்டி அடித்திருக்கும் !!

உயர்பதவிக்கு வருபவர்களின் பின்புலம் இத்தனை எளிமையாக இருந்திருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவர் ஆள்கிற தேசமும் ஓர் புது ஒளிக்கீற்றை பெறக்கூடும் என்கிற எழுதப்படாத சட்டம் போன்ற ஓர் அனுமானம் நமது எல்லார் மனதுகளிலும்.  உதாரணமாக, கர்மவீரர் காமராஜர்..

பலவருடங்களாக இந்தியா ஓர் மகோன்னதமான சூழலை சந்திக்காத துரதிர்ஷ்டம் நிகழ்ந்த விதமாகவே கடந்து வந்திருக்கிறது.. இன்றைக்கு "மோடி" என்கிற ஓர் சக்தி -- பெரிய அதிர்ஷ்டம் போல எல்லாராலும் உணரப் படுகிறது...! அந்த நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் ஓர் அற்புத சூழலை இந்தியாவுக்கு  அறிமுகப் படுத்துவார் மோடி  என்று நாமெல்லாம் நம்புகிறோம்.

மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், பேரன் பேத்திகள், இன்னும் இதர தன்னை சார்ந்த  வாரிசுகள் என்கிற எந்த நாமதேயங்களும் இல்லாமல் தனி ஒரு நபராக இருப்பது  மக்கள் மத்தியிலே ஒருவித மகிழ்ச்சி. .. நம்பிக்கை.. எல்லாம்.. !

ஆட்சிக்கு வருபவர்கள் இப்படி தனித்து இருக்கவேண்டும் என்கிற ஆசை எவருக்கும் இல்லை... ஆனால், அப்படி உறவுக் கிளைகளோடு இருப்பவர்கள் பலவாறாக  நாட்டை மற்றும்  மக்களை சொதப்பி விடுகிறார்கள் என்பது மக்களின் அடியூன்றி  விட்ட அவநம்பிக்கை..

அந்த மனோவியலை வைத்து தான், இன்றைய அரசியல் உலகம் இயங்குகிறது என்பதில் ஐயம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 37 தொகுதிகளில் ஜெயித்த  ஜெ.லலிதா வாகட்டும், பூஜியத்தை தொட்டுவிட்ட கலைஞர்  ஆகட்டும்.. மேற்சொன்ன காரணமாகத் தான் இருக்கக் கூடும்.. !!

அரசியல் நோக்கர்களும், எதிர்கட்சிகளும் , குறை சொல்லக் காத்திருப்பவர்களும் கூர்ந்து கவனிக்கத் துவங்கி விட்டார்கள்.

திரு.மோடியைக் கவிழ்க்கிற சக்தி எதுவாகவும் இருக்கக் கூடாது ....!
மக்கள் உணர்வுகளை, அவர்களது கனவுகளை , வாழ்க்கை லட்சியங்களை, சீரழித்து  உருக்குலைத்த முந்தைய காங்கிரஸ் ஆட்சி போல இந்த ஆட்சி இருக்காது என்று நம்புவோம்... பிரார்த்திப்போம்...!!

நன்றி..


Tuesday, May 13, 2014

வாக்கிங் ஜாகிங்..

"காலைல வாக்கிங் நெதமும் போறேன்..
போகலைனா நான் போயிடுவேன்.. "...
இதுதான் இன்றைய பற்பலரின் நிலையும்.. உடல் ஆரோக்கியம் என்பது கணித பாடம் போல ஆகிவிட்டது.. [எனக்கு maths வராது.. ஆகவே, அதனைப் பொருட்டாக்கி இங்கே உதாரணப் படுத்தி இருக்கிறேன்.. ஹிஹி..]
நீங்களும் உங்களுக்குக் கடினமான ஒரு விஷயத்தை உதராணப் படுத்தி உங்களது உடல் ஆரோக்கியத்தோடு ஒப்பிட்டுக் கொள்க.. !!

எமக்கு பிரத்யேகமாக ஓர் மைதானத்தை நடப்பதற்கு தேர்ந்தெடுத்து தினசரி நடக்கிற புத்தி இல்லை.. கால் போன போக்கிலே மனதினை செலுத்தி புதிது  புதிதான வீதிகளையும் மக்களையும் கண்களில் அலசி ஆராய்ந்தவாறே நடப்பது எமது அன்றாட வழக்கம்.... என்னையும் அறியாமல் நேற்று கடந்த வீதிகள் வந்துவிடும்.. பார்வைப் பரிச்சயத்தோடு சிலரின் தலையாட்டல்கள்.. ஓர் மெல்லிய புன்னகை.. 

இந்த ஓர் லாவகம் மைதானத்தில் அமைவதில்லை.. செக்குமாடு போல சுற்றி சுற்றி வரவேண்டும்.. அரசியல் சினிமா என்று எதையேனும் வாயோயாமல் பேசியாக வேண்டும்.. நக்கல் நய்யாண்டி செய்யவேண்டும்.. உடன் நடக்கிறவர்களை சுவாரஸ்யப் படுத்த வேண்டும்.. இப்படி இத்யாதி இத்யாதி சம்பவங்கள் உண்டு... இதெல்லாம் எழுதப் படாத ஓர் சட்டம் போல, எல்லா பள்ளி மைதானங்களிலும் கவனித்துப் பார்த்தால் தெரியும்..

அந்த கோதாவில் எனக்கு நண்பர்கள் இல்லை என்ற போதிலும் இந்த பந்தாவை அனுசரிக்கிற நபர்களை தரிசிக்க எனக்கு ஒரு  இனம்புரியா எரிச்சல் படர்கிறது.. ஆகவே, இவர்களைத் தவிர்ப்பது உசிதம் என்கிற எண்ணம்..

ஆதலால் தான் தினமும் தெருத் தெருவாக எனது பிரவேசங்கள்..

"வாக்கிங் போயிட்டு இருக்க இருக்க மயக்கம் போட்டாரு.. தண்ணிய மூஞ்சில தெளிச்சோம்.. முழிச்சாரு .. பேசினாரு.. அப்புறம் பார்த்தா பொசுக்குன்னு போயிட்டாரு.. "

"அழகா ஜாகிங் போயிட்டு தான் இருந்தாரு. திடீர்னு நெஞ்சைப் புடிச்சு அந்தக் கல்லு மேல தான்  ஒக்கார்ந்தாரு .. அப்டியே மயங்கி பின்பக்கமா விழுந்து மண்டைல  அடி.. போயிட்டாரு"

வாக்கிங் ஜாகிங் நல்லது என்கிற முஸ்தீபோடு புறப்படுகிற சிலருக்கு இப்படியும் யதார்த்தமாக நிகழ்வுகள்..

நடப்பதோ ஓடுவதோ அற்று பல வருடங்களாக "காலம்பர சாம்பார் வடை , நெய் தூக்கலா  பொங்கல் " என்று விழுங்கி விழுங்கி 90 நெருங்குகிற எத்தனையோ பேர்களை  நாமெல்லாம் பார்த்துக் கொண்டே தானே வியந்துகொண்டும்.. , ஆனால் நமக்காக நாம் பயந்து கொண்டும் வாழ்ந்து வருகிறோம்? 

Saturday, May 3, 2014

மலரினும் மெல்லிய காமம்.. [கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும்.]

செக்ஸ் ஜோக் என்று அன்றைக்கு நான் வெளியிட்ட ஓர் இம்போர்டட் ஜோக்கிற்கு ... படித்தவர்கள் பட்டியல் ஆயிரத்துக்கு மேல்.. 
ஆனால், உணர்வுப் பூர்வமாக, சற்று மனசு விட்டு ஏதேனும் எழுதினேன் என்றால், அதனைப் படித்திருப்பவர்கள் பட்டியல் ஒற்றை இலக்கமே தாண்டி இராது.. 
காமம் மனிதர்களை எங்கனம் ஆளுமை செய்கிறது என்பதை இந்த ஓர் அற்ப துணுக்கை வைத்தே சுலபத்தில் அனுமானிக்க ஏதுவாகிறது.... 

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் பார்வைப் பரிச்சயம் துவங்குகிறது.. பிற்பாடு சிற்சில வார்த்தைப் பரிமாற்றங்கள்... பிறகு நெருங்கி வந்து பேசி .. பரஸ்பரம் கைபேசி எண்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டு ... அப்புறம் இரவுகளில் கூட சூடு பறக்க பேச்சுக்கள்.. மறுபடி நேரில் சந்தித்து அளவளாவல்... நெருக்கம் இறுக்கமாகி.... விரல்கள் கோர்த்து.. முத்தங்கள் விநியோகிக்கப் பட்டு.. ஆலிங்கணம் அரங்கேறுகின்றன.. 
துகில்கள் உரிக்கப் பட்டு இருபாலரும் வெற்றுடல் ஸ்பரிசங்களினூடே புணர்ச்சி பிரவகிக்கிறது.. ஆண்வசமிருத்து அந்த திரவம் வெளியேற்றப் பட்டதும் கிட்டத்தட்ட எல்லாம் அடங்குகிறது.. முக்கல்  முணகல் கெட்ட கெட்ட வார்த்தைகள் உட்பட.. 
அதனையும் தாண்டி பெண்கள் சிலர் அடங்கும் இயல்பற்று இன்னும் இன்னுமென்கிற போது , ஆண்மை ஓர் மௌன வெட்கத்தில் அங்கே குறுகிக் கிடக்கிற அவலம் எல்லா ஆண்களுக்குமே பரிச்சயமான வலி..

அதனைப் பெரிது படுத்தாத பெண்டிரைப் போற்றுவோமாக.!!.. 

நிறைவு வரைக்கும் அடங்கா ஊற்றாக மனிதருள் புதைந்து  கிடக்கிற இந்தக் காமமெனும் ரசாயணம் நம்மில் வீற்றிருக்கிற வேண்டாத கலோரிகளைக் கூட எரித்து விடும் வல்லாண்மை  கொண்டுள்ளது என்பது அடிக்கடி வருகிற ஓர் ஆய்வறிக்கை.. 

இந்த அனுபவம் நேர்கிற தருணம் வரைக்குமான ஓர் எதிர்பார்ப்பு, ஓர் கனவு, ஓர் புளகாங்கிதம், ஓர் அபரிமித கற்பனை, ---- இரு பாலரையுமே ஒருவகையான இம்சைக் கடலில் தள்ளுகிற ஆற்றல் மிக்கதெனில் அது மிகையன்று.. 
பிரீவியஸ் எக்ஸ்பீரியன்ஸ் என்கிற ... அதாவது திருமணத்திற்கு முந்தைய உடலுறவு  அனுபவம் என்கிற ஓர் தேஜஸ் நிரம்பிய , ஜாஜ்வல்யம் ததும்பிய அந்த சொற்றொடர்  உலகின் எல்லா மூலைகளிலும் உள்ளவர்களின் மூளைகளையும் அபரிமித ஆற்றல் நிரம்பிய விஷயமாக மாற்றுகிற திராணி கொண்டதென்பதில் எனக்கொன்றும் இரண்டாம் பட்சக் கருத்தில்லை.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...