Wednesday, May 28, 2014

மோடி

இப்ப மாத்திரம் மோதி வலது கையை ஜோதிடர்கள் பார்த்தாங்கன்னா போதும்.. சும்மா விலாவாரியா அவரோட விஷயங்களை புட்டுப் புட்டு .வைப்பாங்க.

"வாவ்.. இந்தக் கை, கண்டிப்பா இந்த இந்திய தேசத்தை தன்வசப் படுத்தத் தான் போகுது" என்பார்கள்..
"சந்தேகமே இல்லை.. ஒரு காலத்துல டீ ஆத்துன இந்தக் கை, இனி இந்தியாவை ஆத்தப் போகுது" ன்னு சொல்வாக..

சாயா சாயா ன்னு ரயில்  நிலையத்துல கூவிக் கூவி வித்தப்ப "இந்தப் பய தான் இந்தியாவை ஆளப் போறான்னு தெரிஞ்சிருந்தா எவனாச்சும் டீ குடிக்காம இருந்திருப்பானா?..
"நஹி.. நஹி.. சலோ .. டோண்ட் டிஸ்டர்ப் " என்று எத்தனை நாய்கள் விரட்டி அடித்திருக்கும் !!

உயர்பதவிக்கு வருபவர்களின் பின்புலம் இத்தனை எளிமையாக இருந்திருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவர் ஆள்கிற தேசமும் ஓர் புது ஒளிக்கீற்றை பெறக்கூடும் என்கிற எழுதப்படாத சட்டம் போன்ற ஓர் அனுமானம் நமது எல்லார் மனதுகளிலும்.  உதாரணமாக, கர்மவீரர் காமராஜர்..

பலவருடங்களாக இந்தியா ஓர் மகோன்னதமான சூழலை சந்திக்காத துரதிர்ஷ்டம் நிகழ்ந்த விதமாகவே கடந்து வந்திருக்கிறது.. இன்றைக்கு "மோடி" என்கிற ஓர் சக்தி -- பெரிய அதிர்ஷ்டம் போல எல்லாராலும் உணரப் படுகிறது...! அந்த நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் ஓர் அற்புத சூழலை இந்தியாவுக்கு  அறிமுகப் படுத்துவார் மோடி  என்று நாமெல்லாம் நம்புகிறோம்.

மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், பேரன் பேத்திகள், இன்னும் இதர தன்னை சார்ந்த  வாரிசுகள் என்கிற எந்த நாமதேயங்களும் இல்லாமல் தனி ஒரு நபராக இருப்பது  மக்கள் மத்தியிலே ஒருவித மகிழ்ச்சி. .. நம்பிக்கை.. எல்லாம்.. !

ஆட்சிக்கு வருபவர்கள் இப்படி தனித்து இருக்கவேண்டும் என்கிற ஆசை எவருக்கும் இல்லை... ஆனால், அப்படி உறவுக் கிளைகளோடு இருப்பவர்கள் பலவாறாக  நாட்டை மற்றும்  மக்களை சொதப்பி விடுகிறார்கள் என்பது மக்களின் அடியூன்றி  விட்ட அவநம்பிக்கை..

அந்த மனோவியலை வைத்து தான், இன்றைய அரசியல் உலகம் இயங்குகிறது என்பதில் ஐயம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 37 தொகுதிகளில் ஜெயித்த  ஜெ.லலிதா வாகட்டும், பூஜியத்தை தொட்டுவிட்ட கலைஞர்  ஆகட்டும்.. மேற்சொன்ன காரணமாகத் தான் இருக்கக் கூடும்.. !!

அரசியல் நோக்கர்களும், எதிர்கட்சிகளும் , குறை சொல்லக் காத்திருப்பவர்களும் கூர்ந்து கவனிக்கத் துவங்கி விட்டார்கள்.

திரு.மோடியைக் கவிழ்க்கிற சக்தி எதுவாகவும் இருக்கக் கூடாது ....!
மக்கள் உணர்வுகளை, அவர்களது கனவுகளை , வாழ்க்கை லட்சியங்களை, சீரழித்து  உருக்குலைத்த முந்தைய காங்கிரஸ் ஆட்சி போல இந்த ஆட்சி இருக்காது என்று நம்புவோம்... பிரார்த்திப்போம்...!!

நன்றி..


1 comment:

  1. நல்லதையே நினைப்போம்... நடக்கும்... நடக்கட்டும்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...