Skip to main content

Posts

Showing posts from January, 2013

நெரிசல்கள்...

கோவில்களிலும் பேருந்துகளிலும் கூடுகிற கூட்டங்களைப் பார்க்கையில் .... அவைகளைத் தவிர்த்து விடுவதே உத்தமம் என்பதாக மனசுக்குப் படுகிற போதிலும், பேருந்துகளைத் தவிர்த்து இடம் பெயர்வது எங்கனம் என்கிற கேள்வி எழுகிறது.. எவ்ளோ தூரம் வேண்டுமென்றாலும் நான் பைக்கில் பயணிக்க ரெடி என்ற போதிலும் மனைவி அதற்கு ஒத்துழைப்பவளாக இல்லை...

காதலின் சுவடுகள்...

என்னைக் காதல் வசப்படுத்தி பாதித்த எவ்வளவோ பெண்களுக்கு என்னைக் குறித்த தகவல்கள் எந்நாளும் தெரிவிக்கப்பட்டதே இல்லை... ஒருக்கால் எனது காதல் முறையாகத் தெரிவிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் என்னை அணுகி எனது காதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கமுடியும்... பரஸ்பரம் எங்கள் காதல் செவ்வனே பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கக்கூடும்..... காதலின் சுவை உணர்ந்தவனாக, நானும் இவ்வுலகில் ஓர் மகோன்னத அனுபவத்தைப் பெற்றவனாக வலம் வந்திருக்கமுடியும்..!

கவைக்குதவாத வெட்கங்களும் மௌனங்களும், நான் சிறந்து விளங்கி இருக்கவேண்டிய எல்லா தளங்களிலும் என்னை வெறுமனே ஒன்றுமற்றவனாக ஆக்கி யாவற்றையும் அனாவசியத்துக்குப் புதைத்து வைத்திருக்க வேண்டிய விபரீதங்களில் எனது வாழ்நாட்கள் கழிந்தும் கரைந்தும் விட்டன...

இனி மேற்கொண்டு செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றுமில்லை என்றானபோதிலும், ஞாபகங்களாக மனசுள் நிழலாடுகிற அந்த வறண்ட பிராந்தியங்களை இங்கே பதிவிறக்கம் செய்வதில் சிறிது ஆசுவாசம் உணரமுடிகிறது... அதன் நிமித்தமே, இந்தக் "குப்பைகொட்டுகிற" காரியம் நடந்தேறுகிறது....!!

இன்னொரு விஷயத்தையும் என்னால் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்ல…

திரு திண்டுக்கல் தனபால் அவர்கட்கு.. ஒரு விண்ணப்பம்..

திரு திண்டுக்கல் தனபால் அவர்கட்கு.. 

நான் திருப்பூரிலிருந்து சுந்தரவடிவேலு எழுதுவது.. நலம் .. நலமறிய அவா.  இப்பவும் எனது அனைத்து இடுகைகளுக்கும் ஏதேனும் பின்னூட்டம் போட்டு வருவதை ஓர் தலையாய கடமையாக மேற்கொண்டு செயல்பட்டு என்னை சிலிர்க்கச் செய்து வந்தீர்..
ஆனால் திடீரென்று காலை வாரிக் கவிழ்ப்பது போல ... எவ்விதத் தகவலும் அற்று ஊமையாக மாறி விட்டீர்.ஒய் திஸ் கொலவெறி ?... 
தங்களின் அற்புத பின்னூட்டங்களால் எழுதுவதில் ஓர் பிரயத்தனத்தைக் கடைபிடித்து வந்தவன், திடுதிப்பென்று தாங்கள் விமரிசிப்பதை நிறுத்தியதை அடுத்து எனக்கு எழுதுவதே போதும் என்பது போலாகிவிட்டது.. தங்களின் ஒரே பின்னூட்டத்தோடு ஜொலித்து வந்த எமது இடுகைகள் அனாதைகளாக மாறி விட்டன.. இன்று எந்தப் பயல்களும் என் எழுத்தை விமரிசித்து எழுதுவதில்லை.. 
நடுக்காட்டில் விடப்பட்டது போல திக்கற்று திணறி மூர்ச்சையாகிக் கிடக்கிற எம்மை , காப்பாற்றுகிற எண்ணம் இருக்கிறதா இல்லையா?.. 
நான் நினைத்தேன்.., இனி வரிசை கட்டி எமது படைப்புகளுக்கு இடுகைகள் வந்து விழும் என்று... ஆனால், இடுகை இட்டு வந்த ஒரே நபரும் எனது சிந்தனைக்கு ஆப்பு வைத்து விடவே, "என்னாங்கடா பொழ…
விகடனுக்கு எழுதி அனுப்பிய கவிதை.. அனுப்பிய நாளிலிருந்து ரெண்டு மாதங்கள் வரைக்கும் வருகிற விகடன் இதழ்களில் பிரசுரமாகிறதா என்று கவனிக்கச் சொன்னார்கள், விகடன் குழுவினர்... அப்படி பிரசுரமாகவில்லை எனில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்று அர்த்தப் படுத்திக் கொள்ளச் சொன்னார்கள்.... அந்த ரெண்டு மாதங்கள் நான் விகடனை கவனிக்கவில்லை, அதில் எனது கவிதை இடம் பெற்றுள்ளதா என்பதையும் நான் கவனிக்கவில்லை..
அதனால் என்ன, விகடன் தவிர்த்துவிட்டால் தவிர்த்துவிட்டுப் போகட்டும், அதான் என்னோட ப்ளாக் இருக்கே... இங்கே என்னோட கோடானு கோடி ரசிகர்கள் குவிஞ்சு கெடக்கறாங்களே .. இனி கமெண்ட்ஸ் மேல கமெண்ட்ஸ் கொட்டித் தீர்ப்பாங்களே...!!

தவிர்க்க முடியாதது 


கண்ணீர் அஞ்சலிப் போஸ்டரில்
இடம்பெற்ற முகம் நமக்கு  அறிமுகமில்லாத  முகமென்றால், -அனாவசியமான  வெறுமை ஒன்று  மனசை  ஆக்கிரமிப்பதை  ஏனோ தவிர்க்கவே  முடிவதில்லை..!!

அந்த அப்பாவி டில்லிப் பெண்

அந்த அப்பாவி டில்லிப் பெண் சம்பவம் கல்வெட்டை விட ஆழப் பதிந்து விட்டன எல்லாரது மனங்களிலும்...
நிச்சயம் அந்த சம்பவம் நிகழ்ந்த அந்தக் கொடூர ஷணங்கள் எல்லாரது மனங்களிலும் ஓர் தவிர்க்க முடியாத கற்பனையாக ஒவ்வொரு விதமாக ஓடிக் கொண்டுதான் இருக்கும்..
தனது இனமெனில், நான்கறிவு ஐந்தறிவு படைத்த மிருகங்கள் கூட ஓர் இரக்கத்தைக் காண்பிக்கிற இவ்வுலகில் ஆறறிவு படைத்த மனித இனம் எப்படி இப்படி ஓர் கேவல செயலைச் செய்தது?

அங்கே இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரஜையும் ஈவிரக்கமற்ற மனோபாவம் கொண்டவர்கள்... பிணத்துடன் கூட உறவு வைக்கத் தயங்காத ஈன ஜென்மங்கள்... பீயைத் தின்று கூட ஏப்பம் விடுகிற பனாதிப் பரதேசிப் பயல்கள்..

அதில் ஒரு பயல் பதின் வயதில் உள்ளதாகவும் அவனுக்கு தண்டனை சற்றே மாற்றி அமைக்கவேண்டும் என்றெல்லாம் ஆலோசித்து நேரத்தை அனாவசியமாக விரயம் செய்து வருகிறார்கள்.. 

எவ்வித பாரபட்சங்களும் அற்று இவர்கள் அனைவரும் மிகக் கொடூர முறையில் சாகடிக்கப் படவேண்டும் என்பது எல்லாரது ஒருமித்த கருத்தும் ஆகும்..
கொசுவை நசுக்க "ஜீவகாருண்யம்" பேசுகிற ஓர் சாது கூட , இந்த கற்பழிப்பு கும்பலை சுண்ணாம்புக் கால்வாயில் தூக்கிப் போட்டுக் கொ…