Skip to main content

Posts

Showing posts from July, 2016

அகாலம்

இழவு வீட்டில்
அழும் பெண்களில் 
அழகி தேடும்
சபலக் கண்கள் ..
இறந்தவரின்
உறவுப் பெண் வந்து
கட்டித் தழுவி
அழ நேர்கையில்
மார்புச் சூட்டில்
மயங்கிடும் கயமை..
செத்தவன் அறிவான்
சேற்றுப் பன்றி
இவன் என்று...
எழுந்தா வரப் போகிறான்
எமனோடு ஓடிப் போனவன்?
நேற்றுக் கூட
புத்திமதி சொன்னானவன்.
"மற்றோரின் பெண்டிரில் விழுந்தால்
நீ நாறி.. உன் தாய் மனைவி மகள் நாறி.."
-- சொன்ன உத்தமன்
எல்லாரையும் நாறவிட்டுப்
போயே விட்டான்..
இப்படித்தான் சமயங்களில்
உன்னதமானவர்கள்
அகாலமாகத் தொலைவதும்
ஊதாரிகள் அகாலமாக
வாழ்வதும் ..
இப்பிரபஞ்சத்தின்  சுலப நிகழ்வாகி விடுகிறது.. !!?

கபாலி.............. சினிமா விமரிசனம்

"மகிழ்ச்சி".... படம் நெடுக இது இல்லை எனிலும், அவ்வப்போது ரஜினியால் தூவப்படுகிற அனாவசிய ஒற்றை வார்த்தை.. 
புதிதாக அகராதியில் சேர்க்கப் பெற்ற வார்த்தை போன்று மக்களுள் இப்போது தான் இந்த வார்த்தை உதடுகளில் குடி புகுந்துள்ளது... 
அனுபவங்களாக இருந்த கட்டங்களில் கூட உச்சரிக்கப் படாத இந்த வார்த்தை, மிகப் பெரும் அவ்ஸதையில் சிக்கிக் கொண்ட பிற்பாடு உதட்டளவில் பிதற்ற வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது கபாலி.. 
மனைவி தேடி கண்டங்கள் கடக்க நேர்வதைப் பார்க்கையில் இது ரஜினி படமா ரஜினியின் மனைவி படமா என்கிற சந்தேகம் எழுகிறது..

சினிமா உலகம் பாலை வெளியாயிருந்த கால கட்டங்களில் தமது வருகையால் 'பாலைவன சோலை' யாக மாற்றிய ஒரு மனிதன்..
இன்று.. டெக்நிக்கல் விஷயங்களில் அபரிமிதம் நிரம்பி பருத்துத் தழைத்துக் கிடக்கிற சினிமாவை எதற்காக கபாலி வந்து இப்படி ஒரு பாலைவனமாக்க வேண்டும்?
பைனான்சு நடத்தி ஏமாற்றுகிறவன் கூட ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை சார்ந்த மக்களை மட்டுமே ஏமாற்ற முடியும்.. ஆனால், இந்தக் கபாலி உலகத்தையே.. மொத்த உலக மக்களையே மட சாம்பிராணி ஆக்கி விட்டதே.. !
குழந்தைக்கு ஹார்லிக்ஸ் பூஸ்ட் வாங்குவதைய…

மணக்கிற நாற்றங்கள் ..

கழிவேறும் பிராந்தியங்கள் மீதாக  
பிரத்யேக காம உணர்வினை 
செருகி இருக்கிற 
படைத்தவனின் கூற்று 
விவரிக்கிற வார்த்தைகளை 
தொலைத்தவை.. 

திரேகம் எங்கிலும் 
வியர்வை நாளங்கள் 
பீய்ச்சி அடித்த ஈரம்.. 
அதனை அசிங்க அடையாளமாக 
காண்பிக்கிற நமது உடைகள்.. 
அதற்கொரு பிரத்யேக துர்நாற்றம்.. 

பரஸ்பரம் 
மனிதக் கழிவுகள் மட்டுமே 
இன்னொரு மனிதனை 
அசூயை கொள்ள செய்கிறது.. 

ஒரு காகத்தின் எச்சம் 
ஏற்படுத்தாத அருவருப்புணர்வு 
காலில் மலம் மிதி படுகையில் 
நிகழ்ந்து விடுகிறது.. !

சிகப்புக் குருதி உள்ளோடும் 
பச்சை நரம்புகள்..
புடைத்து சீழ் கோர்த்து நிற்கிற 
மருந்திட  மறந்த காயங்கள்....

இன்னும் அடுக்கிப் பட்டியலிட 
ஏராள நாற்றங்கள் உண்டு மனிதனிடத்து.. 

ஆனால் விளக்கணைந்த 
இருண்ட  அறைகளில் 
நுகர்கிற பிரக்ஞையை அறவே இழந்து 
அனைத்தும் மணக்கிறதென்று 
தம் கற்பனைகளுக்கு 
அரிதாரம் பூசிக் கொள்கிறான் ..!!

ஸ்வாதிகளும் ராம்குமார்களும்..

சமூக வலைதளம் என்பது கத்தி போல.. 
சாதுர்யமாக நடையிட சாத்திய ப் படவில்லை எனில், நம்மைக் காய படுத்துவது மட்டுமன்று ... ரெண்டு துண்டாக்கிக் காணாமற் செய்து விடும்.. !
சாட்டிங்கில் ஒரு நபருடைய அந்த சாட் செய்கிற மொழி, அவர் பேசுகிற வாய்வழி மொழி, இவை போக நேரில் பார்க்கையில் அவரது உடல் மொழி யாவற்றையும் கிரகிக்கிற ஆற்றல் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியம்.. 

பொதுவாகவே உணர்ச்சிவசப் படுதல் என்பது ஆண் இனத்தின் பொது இயல்பு.. அது ஆறறிவிலும் சரி, ஐந்தறிவிலும் சரி.. 
எந்தப் பெட்டை நாய்களும் ஆண் நாயைப் புணர்வதற்கான முஸ்த்தீபை 
மேற்கொள்வதில்லை...! பெண்மயில்களை மயக்கத் தான் ஆண் மயில்கள் தோகை விரித்தாடுகின்றன.. 

ஆனால் சமீப காலமாக மனித இனத்தில் மாத்திரம் பெண்கள் ஆண்களிடத்தே தோகை விரித்தாடுகிற விபரீதங்கள் எங்கெங்கிலும் நிகழ்ந்தேறுவதாக அனுமானிக்க முடிகிறது.. 

பார்க்குகள் என்பன திறந்தவெளி விபச்சார விடுதிகள் போன்றே எல்லா ஊர்களிலும் புரிபடுகின்றன. காதல்களும் கள்ள க் காதல்களும் களேபரப் படுகின்றன அந்த சிமெண்ட் பெஞ்சுகளில்.. !!

தரமில்லாத ஒருவன் தனது காதலை வெளியிடும் பட்சத்தில் அதனை நாசுக்காகக் கையாள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அத…