Monday, July 11, 2016

மணக்கிற நாற்றங்கள் ..

ழிவேறும் பிராந்தியங்கள் மீதாக  
பிரத்யேக காம உணர்வினை 
செருகி இருக்கிற 
படைத்தவனின் கூற்று 
விவரிக்கிற வார்த்தைகளை 
தொலைத்தவை.. 

திரேகம் எங்கிலும் 
வியர்வை நாளங்கள் 
பீய்ச்சி அடித்த ஈரம்.. 
அதனை அசிங்க அடையாளமாக 
காண்பிக்கிற நமது உடைகள்.. 
அதற்கொரு பிரத்யேக துர்நாற்றம்.. 

பரஸ்பரம் 
மனிதக் கழிவுகள் மட்டுமே 
இன்னொரு மனிதனை 
அசூயை கொள்ள செய்கிறது.. 

ஒரு காகத்தின் எச்சம் 
ஏற்படுத்தாத அருவருப்புணர்வு 
காலில் மலம் மிதி படுகையில் 
நிகழ்ந்து விடுகிறது.. !

சிகப்புக் குருதி உள்ளோடும் 
பச்சை நரம்புகள்..
புடைத்து சீழ் கோர்த்து நிற்கிற 
மருந்திட  மறந்த காயங்கள்....

இன்னும் அடுக்கிப் பட்டியலிட 
ஏராள நாற்றங்கள் உண்டு மனிதனிடத்து.. 

ஆனால் விளக்கணைந்த 
இருண்ட  அறைகளில் 
நுகர்கிற பிரக்ஞையை அறவே இழந்து 
அனைத்தும் மணக்கிறதென்று 
தம் கற்பனைகளுக்கு 
அரிதாரம் பூசிக் கொள்கிறான் ..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...