Wednesday, July 27, 2016

அகாலம்



இழவு வீட்டில்
அழும் பெண்களில் 
அழகி தேடும்
சபலக் கண்கள் ..

இறந்தவரின்
உறவுப் பெண் வந்து
கட்டித் தழுவி
அழ நேர்கையில்
மார்புச் சூட்டில்
மயங்கிடும் கயமை..

செத்தவன் அறிவான்
சேற்றுப் பன்றி
இவன் என்று...
எழுந்தா வரப் போகிறான்
எமனோடு ஓடிப் போனவன்?

நேற்றுக் கூட
புத்திமதி சொன்னானவன்.
"மற்றோரின் பெண்டிரில் விழுந்தால்
நீ நாறி.. உன் தாய் மனைவி மகள் நாறி.."
-- சொன்ன உத்தமன்
எல்லாரையும் நாறவிட்டுப்
போயே விட்டான்..

இப்படித்தான் சமயங்களில்
உன்னதமானவர்கள்
அகாலமாகத் தொலைவதும்
ஊதாரிகள் அகாலமாக
வாழ்வதும் ..
இப்பிரபஞ்சத்தின் 
சுலப நிகழ்வாகி விடுகிறது.. !!?

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...