Sunday, July 24, 2016

கபாலி.............. சினிமா விமரிசனம்

Image result for kabali modern arts

"மகிழ்ச்சி".... படம் நெடுக இது இல்லை எனிலும், அவ்வப்போது ரஜினியால் தூவப்படுகிற அனாவசிய ஒற்றை வார்த்தை.. 

புதிதாக அகராதியில் சேர்க்கப் பெற்ற வார்த்தை போன்று மக்களுள் இப்போது தான் இந்த வார்த்தை உதடுகளில் குடி புகுந்துள்ளது... 

அனுபவங்களாக இருந்த கட்டங்களில் கூட உச்சரிக்கப் படாத இந்த வார்த்தை, மிகப் பெரும் அவ்ஸதையில் சிக்கிக் கொண்ட பிற்பாடு உதட்டளவில் பிதற்ற வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது கபாலி.. 

மனைவி தேடி கண்டங்கள் கடக்க நேர்வதைப் பார்க்கையில் இது ரஜினி படமா ரஜினியின் மனைவி படமா என்கிற சந்தேகம் எழுகிறது..


சினிமா உலகம் பாலை வெளியாயிருந்த கால கட்டங்களில் தமது வருகையால் 'பாலைவன சோலை' யாக மாற்றிய ஒரு மனிதன்..
இன்று.. டெக்நிக்கல் விஷயங்களில் அபரிமிதம் நிரம்பி பருத்துத் தழைத்துக் கிடக்கிற சினிமாவை எதற்காக கபாலி வந்து இப்படி ஒரு பாலைவனமாக்க வேண்டும்?

பைனான்சு நடத்தி ஏமாற்றுகிறவன் கூட ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை சார்ந்த மக்களை மட்டுமே ஏமாற்ற முடியும்.. ஆனால், இந்தக் கபாலி உலகத்தையே.. மொத்த உலக மக்களையே மட சாம்பிராணி ஆக்கி விட்டதே.. !

குழந்தைக்கு ஹார்லிக்ஸ் பூஸ்ட் வாங்குவதையே பல மாதங்கள் ஒத்திப் போட்டுவிட்டு வரக்காப்பி கொடுத்துப் பழக்குகிற நடுத்தர மக்களும், அதற்கும் கீழானவர்களுமே கூட ஐந்நூறு ஆயிரம் என்று கப்பம் கட்டி சுண்ணாம்பானதை எப்படி சொல்ல?

அதென்ன ரஜினி மகள்?.. அதென்ன துப்பாக்கி சூடு? . அதென்ன குருதிப் புனல்?.. அதென்ன அலறல்கள் .. அவலங்கள்??
பாஷாவில் தான் ஆசை தீர டானாக நடித்துத் தீர்ந்தாயிற்றே .. பிற்பாடும் அதுவும் இத்தனை இடைவெளிக்குப் பிற்பாடு எதற்காக அதே கருமாந்திரம்?..

இந்த அற்ப கருவில் அப்படி என்ன பெரிய சுவாரஸ்யம்?.. இத்தனை உடல் பலவீனத்தில் அப்படி என்ன முறுக்கு.. அப்படி என்ன அகந்தை.. அப்படி என்ன பந்தோபஸ்து?..

நானெல்லாம் பில்லாவை ஒரே நாளில் 2 முறை பார்த்துக் குதூகலித்தவன்.. ஆனால் கபாலியை கால்வாசிப் பார்க்கையிலேயே தெறித்தோடி வந்து விடத் தோன்றி விட்டதே.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...