Wednesday, July 6, 2016

ஸ்வாதிகளும் ராம்குமார்களும்..


Image result for blood stainImage result for blood stain
மூக வலைதளம் என்பது கத்தி போல.. 
சாதுர்யமாக நடையிட சாத்திய ப் படவில்லை எனில், நம்மைக் காய படுத்துவது மட்டுமன்று ... ரெண்டு துண்டாக்கிக் காணாமற் செய்து விடும்.. !
சாட்டிங்கில் ஒரு நபருடைய அந்த சாட் செய்கிற மொழி, அவர் பேசுகிற வாய்வழி மொழி, இவை போக நேரில் பார்க்கையில் அவரது உடல் மொழி யாவற்றையும் கிரகிக்கிற ஆற்றல் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியம்.. 

பொதுவாகவே உணர்ச்சிவசப் படுதல் என்பது ஆண் இனத்தின் பொது இயல்பு.. அது ஆறறிவிலும் சரி, ஐந்தறிவிலும் சரி.. 
எந்தப் பெட்டை நாய்களும் ஆண் நாயைப் புணர்வதற்கான முஸ்த்தீபை 
மேற்கொள்வதில்லை...! பெண்மயில்களை மயக்கத் தான் ஆண் மயில்கள் தோகை விரித்தாடுகின்றன.. 

ஆனால் சமீப காலமாக மனித இனத்தில் மாத்திரம் பெண்கள் ஆண்களிடத்தே தோகை விரித்தாடுகிற விபரீதங்கள் எங்கெங்கிலும் நிகழ்ந்தேறுவதாக அனுமானிக்க முடிகிறது.. 

பார்க்குகள் என்பன திறந்தவெளி விபச்சார விடுதிகள் போன்றே எல்லா ஊர்களிலும் புரிபடுகின்றன. காதல்களும் கள்ள க் காதல்களும் களேபரப் படுகின்றன அந்த சிமெண்ட் பெஞ்சுகளில்.. !!

தரமில்லாத ஒருவன் தனது காதலை வெளியிடும் பட்சத்தில் அதனை நாசுக்காகக் கையாள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அது சம்பந்தப் பட்ட எல்லா பெண்களுக்குமே உண்டு.... தமது ஆட்சேபத்தினை அநாகரீகப் படுத்தாமல் அவனுக்குத் தகுந்த வகையிலே ஒரு பதிலை சொல்லி .. திரும்ப அவனே அவளிடம் மன்னிப்புக் கேட்கிற வகையிலே ஒரு சூழலை உருவாக்க வேண்டிய மாண்பு அவளிடம் தேவைப் படுகிறது.. 
அவ்விதம் இல்லாமல் , அவனது காதலை காய ப் படுத்துகிற விதமாக தமது அகந்தையை ரௌத்திரத்தை ஈகோவை ஒன்றிழைத்து மனரீதியாக குத்திக் குதறி விடுவது மகா முட்டாள் தனமாகும்.. 

அப்படி ஒரு தவறைத் தான் ஸ்வாதி செய்து விட்டார் என்று நமக்கெல்லாம் தோன்றுகிறது.. 

சவால் விடுவதும் காறி மூஞ்சியில் உமிழ்வதும் சினிமாவில் சிறப்பாகத் தெரியலாம்.. நிஜத்தில் அது வேறு விபரீத விளைவுகளை நிகழ்த்த ஏதுவாகி விட்டதென்கிற யதார்த்தம் தான் அந்த நுங்கம்பாக்கம் கொலை.. 

ஒரு ஐ.டி யில் வொர்க் செய்கிற பெண்ணை எந்த மீடியாக்கள் இப்படி நடக்கத் தூண்டியது என்கிற கேள்வி நம் மனங்களில் எழுகையில், நிச்சயம் முதலிடம் பிடிப்பது இந்தத் தொலைக்காட்சி நாடகங்கள் தான்.. 
அதில் இடம் பெறுகிற பெண்ணாதிக்க வீரிய வசனங்களும் , அநியாய அதிகப் பிரசங்கங்களுமே நிஜப் பெண்களையும் கேனத் தனமாக நடக்கச் செய்கிறது என்று ஒரு அடிமுட்டாள் கூட ஒரு முடிவுக்கு வந்துவிட முடிகிறது.. !!

நாசூக்கான யதார்த்தங்கள் பிடிபடாத வரையிலுமாக, இப்படியான ஸ்வாதிகளும் ராம்குமார்களும் எங்கெங்கிலும் இன்னும் பொங்கிப் பெருகுவர் என்றே ஒரு தீர்மானத்திற்கு வரமுடிகிறது....!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...