வழக்கமான அன்றாட செய்திகள் ஆகி விட்டன -- ஐந்தாறு வயது நிரம்பிய குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதும, ஜன சந்தடி நிறைந்த பேருந்து நிறுத்தங்களில் அழகிய பெண்மணிகளின் முகங்களில் திராவகம் வீசப் படுவதும்..
"ஐயோ" என்று பதறுகிற பிரக்ஞை கூட அற்று சர்வ சாதாரண நிகழ்வுகள் போல படித்துவிட்டு செய்தித் தாள்களை வீசிவிட்டுப் போகிறோம்..
விபரீதங்கள் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நேர்கிற வரைக்கும் அதன் வீரியம் நமக்குப் புரிவதாயில்லை... எங்கோ எவர்க்கோ நேர்ந்து செய்திகளாக வருகையில் அவை மனசை சற்றே ஆக்கிரமித்து"இச்சு"கொட்ட வைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறது.
இதென்ன இப்படி வக்கிரம் போட்டு ஆட்டுவிக்கிறது?.. அல்லது இவையெல்லாம் தொன்று தொட்டே அன்றாடம் நடந்து வருகிற விஷயங்களா...?. மீடியாக்கள் பெருத்துவிட்ட இன்றைய காலகட்டங்களில்--இம்மாதிரி சம்பவங்கள் சற்றே பிரம்மாண்டப் படுத்தப் படுகிறதோ??..
இதையெல்லாம் வைத்துப் பார்க்கிற போது .... இம்மாதிரி பல சம்பவங்கள் தினசரி நிகழ்கிறதென்றும் ... ஏதோ ரெண்டொன்று மாத்திரம் செய்திகளாக வந்து கொண்டிருப்பதாக அனுமானிக்க வேண்டியுள்ளது..
இந்த சமூகத்தில் நிகழ்கிற எல்லா நல்ல கெட்ட விஷயங்களுமே இதே விதமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ...
இம்மாதிரிக் குற்றங்களைப் புரிகிற நபர்களை நய்யப் புடைய வேண்டுமென்கிற ரௌத்திரம் ... ஓர் பயித்தியகாரனுக்குக் கூட உண்டு.. கண்டதுண்டமாக வெட்டி நாய்க்கு நரிக்குப் போடவேண்டும் அவனுகளை என்கிற பரமவெறி ஓர் கூர் தீட்டிய கத்தி போல மனசில் கிடக்கிறது..
என்ன மனித ஜென்மங்கள் இவர்கள்?
இந்தக் கேள்வி என்ன அவ்வளவு சாதாரணமாகக் கேட்கப் பட வேண்டிய கேள்வியா என்ன??

No comments:
Post a Comment