என் அகந்தை
என் ரசனை சம்பந்தப்படாதது..
அது அநியாயமான
வார்த்தைகள் கொண்டது...
கவிதையாக பெயர்க்க
யோக்யதை அற்றது..
மிகவும் அநாகரீகமானது
என் அகந்தை...
காலில் பீ அப்பியது போல..,
உண்ணும் சோற்றில் யாரோ
எச்சில் உமிழ்ந்தது போல..!!
மிகவும் வீரியமாய்
புடைத்து வருகிற பலவீனம் அது..
என் இயல்பேயான எளிமைகளையும்
மென்மைகளையும்
ஷணத்தில் துவம்சம் செய்து விடுகிற
சூறைக்காற்று..
மேற்கொண்டு என் இயல்புகளை
வெளிக் கொணர்ந்தாலும்
சந்தேகிக்க வைப்பது ..
இனி முடிவு செய்து விட்டேன்..
என் அகந்தைக்கு முடிவு
கட்ட வேண்டும் என்று..
ஆனால் இது எத்தனையாவது
தடவை என்பது தான் தெரியவில்லை..
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பா ப்பாவின் குறும்பு எனக்கும் மனைவிக்கும் ரத்தக் கொதிப்பேற்றும்.. முதுகில்அறைந்து விடுவதும் கால்களுக்குக் கீழே நறுக்கென்று கிள்ளி வி...
Nice!
ReplyDelete