உன்னை ஸ்பரிசிப்பதற்கான வாய்ப்புக்கள் பன்முறை வழங்கப் பட்டுமே கூட ... தொடாமலிருப்பதே புனிதக் காதல் என்கிற முட்டாள் அனுமானத்தில் எமது பௌருஷம் பிதற்றிக் கிடந்த நாட்கள் அவை....
இன்றும்மைக் கண்களால் கூடக் காண்பதரிது என்கிற ஓர் சூழலைக் காலம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.... தீர்க்கதரிசி போன்று இதனை அன்றே நான் எதிர் நோக்கியிருந்தேன் என்பதே கொடுமையான உண்மை..
என்னை நீ மதித்ததே பெரிய புண்ணிய விஷயம் போன்று அரண்டு போய்க் கிடந்தேன்.. மற்றபடிக்கு உன்னைத் தொடுவதோ, உன் கைகளைப் பிடித்து முத்தங்கள் உதிர்ப்பதோ, பிற்பாடு அள்ளி அணைப்பதோ.. யாவும் எனது காதலுக்கு நான் செய்கிற பெரிய அபவாதம் போன்று தீர்மானம் மேற்கொண்டிருந்தேன்..
அருந்த நான் நீர் கேட்கையில் தம்ளரில் வந்து ஜலம் கொடுக்கையில் அதனை உமது விரல்கள் எனது விரல்கள் தீண்டா வண்ணம் மிகக் கவனமாக வாங்கி அருந்திய அந்தக் காட்சிகள் இன்னும் எனது கண்கள் முன்பு விரிந்து படர்கின்றது..
ஒருக்கால் தொடுவது அன்று நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் நீ எம்மைத் தவறாக கருதக்கூடும் என்று பயந்து நான் மன்னிப்புக் கூடக் கேட்கத் துணிந்திருப்பேன்... நல்ல வேளையாக அந்த அளவு எமது மடத்தனம் நீளவில்லை என்பது சற்றே ஆறுதல்..
நீயுமே கூட நான் தொடுகிற சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கலாம் என்று என்ன அழகாக அவசரமாக இந்த நாட்களில் நான் புரிந்து வைத்திருக்கிறேன்??.. ஐயோ ஐயோ..

No comments:
Post a Comment