Thursday, June 26, 2014

பெண்

2 வீலர் டிரைவ் தெரிந்த பெண் எதன் நிமித்தமோ ஓரமாக ஒதுங்கி நின்று மொபைல் பேசுவதைப் பார்க்கையில்..
பார்க்கிற எல்லாருக்குமே அது தவறாகப் படுவது துரதிர்ஷ்டமே..

கால் விரல்களில் மிஞ்சியும் கழுத்தில் மஞ்சக் கயிறும் இருந்தால், அவள் பேசுவது கள்ளக் காதலனோடு..
இவை எதுவும் இல்லை எனில் அவள் பேசுவது ஏதோ ஒரு பயலோடு..
இன்னும் அவள் சிரித்துக் கொண்டு பேசினால், அது இன்னும் சந்தேகமும் பொறாமையும் கிளப்புகிற சமாச்சாரங்கள் ..

புருஷனோடு குழந்தைகளோடு தோழிகளோடு ஒரு பெண் சிரித்துக் கொண்டு மொபைலில் பேசக் கூடாதா?..

அவளுக்கு அக்கா தங்கச்சி இல்லையா. அண்ணன்தம்பி இல்லையா.. அட, அவ்ளோ ஏன் , அம்மா அப்பா இல்லையா?..

ஆனாலும் அவள் வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஒய்யாரமாக செல்லை காதில் செருகி உரையாடுவது.காதலனோடு தான் என்கிற தீர்மானமான அனுமானம் தவிர்க்கமுடியாத கேவலமாக எல்லாரது மனங்களிலும் ஊடாடுவது எந்த வகை ?

இதே விதமாகத்தானே நமது வீட்டுப் பெண்கள் செய்தாலும் பிறர்க்குத் தோன்றக் கூடும்?..

பெண்களை இப்படி மையப் படுத்தி அவர்களை ஸ்கூட்டர் பழக்க விடாமல் இருந்தால், மார்கெட் போவதற்கும் ஸ்கூலில் இருந்து குழந்தைகளை அழைத்துவர  என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தாங்களே அல்லோல கல்லோலப் படவேண்டி  உள்ளதென்கிற அவஸ்தைகளால் "என்ன கருமம் வேண்டுமெனிலும் நடந்து  தொலையட்டும். நம்ம உசிரப்  புடுங்காம இருந்தான்னா சரி  "  என்கிற மனோபாவத்தில் இருக்கிற ஆண்களின் குணாதசியம் "தப்புச் செய்கிற" பெண்டிற்கு சவுகர்யமாகி விடுகிறது..

ஆனால் எவ்விதத் தவறுகளும் செய்யாமலே இப்படியான இழுக்கான சூழல்களை சந்திக்கிற அவலம் சில பெண்களுக்கு ஏற்படுகையில் அது தாங்கொணா  துயராக நமக்குப் புலனாகிறது..

அவர்களுக்கு வக்காலத்து வாங்க பீறிடுகிற அவாவை அழுத்தி வைத்துக் கொள்ளவேண்டி உள்ளது.. மீறி, சப்போர்ட் பண்ணினால் "மச்சானுக்கென்ன இம்புட்டு அக்கறை?" என்கிற  நக்கல் கேள்வியின் தர்மசங்கடம் தூக்கிவாரிப் போடுகிறது...

"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்து"
"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.'

பாரதியின் அன்றைய அறைகூவல் இன்றைக்கும் சமயங்களில் செல்லாக்காசாகத்  தான் தெரிகிறது..

நம்முடைய பெருந்தன்மைகளும் நாகரீக செயற்பாடுகளும் நாசுக்கும்  இங்கிதமும்-- வெளிப்படுத்தப் படாத வகையறா உணர்வுகளாகவே நம்மில் இறுகி இறக்கிவைக்கப் படாத மூட்டைகளாகவே நம்மால் சுமந்து கொண்டிருக்கப் படுகிறது..

அவைகளெல்லாம் சரிவரப் பிரயோகிக்கப் பட்டால் மாத்திரமே பெண்களை இன்னும் கேவலமாக  சித்தரித்துக் கொண்டிருக்கிற இந்த சூழல்கள் மாறப் பெறும் ..

அதுவரைக்கும், ஆயிரம் பாரதிகள் கொக்கரித்தாலும் இம்மியளவு மாற்றங்கள் கூட நிகழும் வாய்ப்பில்லை..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...