Monday, March 11, 2013

நிஜங்களின் நிழல்கள்...

காற்றும் வெளிச்சமும்
வருவதற்கென
கட்டப் பட்ட ஜன்னல்கள்
காறித் துப்பவும்
வாயைக் கொப்புளிக்கவும்
உபயோகத்துக்கு
மாறுவது போல..

சாமி சிலைக்கென
வெட்டப் பட்ட பாறைகள்
சில சிதைவுகள்
காரணமாக
படிக்கட்டுக்களாக
பரிணாம வளர்ச்சி[?]
கண்டன...

கோரஸ் பாட வந்து
பிரபலப் பின்னணிப்
பாடகனாகிற வாய்ப்பு..
சூப்பர் ஸ்டார்
ஆகிற கனவில் வந்து
குத்தாட்ட கும்பலில் கூட
 இடம்பெறக் காத்திருப்பது..

வழி நெடுக
எத்தனை பிள்ளையார்
கோவில்கள் இருந்தாலும்,
பிரச்சினைகள்
புடைசூழ்கையில் மாத்திரமே
பிரார்த்திக்கக்
குவிகின்றன கைகள்..

பிரச்சினைகளுக்குப் பிரார்த்திக்க
பிள்ளையார்கள் தேவையில்லை..
தெருச் சொறி நாய்களைக்
கூட "காப்பாற்று பைரவா "
என்கிறது மனது..

எல்லா சூழ்நிலைகளுமே
மாறுதலுக்கு உட்பட்டதென்கிற
உத்திரவாதங்களோடு
நம்மோடு உலா
வந்துகொண்டிருக்கிறது..
மரணத்தைத் தவிர..!!


4 comments:

  1. ஒவ்வொரு வரிகளும் உண்மையை பேசுகின்றன! அருமை! நன்றி!

    ReplyDelete
  2. உங்கள் அனைவரது அங்கீகாரங்களும் என்னுள் ஓர் சிலிர்ப்புச் சிறகை முளைக்க வைத்துப் பறக்கத் தூண்டுகோலாய் உள்ளது .. மிக்க நன்றி.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...