முள்ளால் முள் எடுப்பது போன்று..
எமது உறக்கத்தைக் கலைத்தது
அவளின் உறக்கம்..
பேருந்தின் நெடிய பயணம்..
ஆழ்ந்துறங்கிய வண்ணம்
ஜன்னலோர இருக்கையில் நான்..
கண்டக்டரின் விசில் நமைச்சலிலோ
டிரைவரின் திடீர் பிரேக்கிலோ
கொடூரமாகக் கறைகிற ஸ்பீக்கர் முழக்கத்திலோ
என் பொன்னுறக்கம் உதிர நேர்ந்தது..
நான் தூங்க ஆரம்பித்திருந்த சமயத்தில்
உட்கார்ந்திருந்த வெற்றிலை பாக்குக் கிழவியே
என் முந்தைய சீட்டில் இருந்திருக்கும் பட்சத்தில்
எமது பேய்த் தூக்கம் மறுபடி தொடர்ந்திருக்கும்..
ஆனால், ஏதோ ஒரு நிறுத்தத்தில் கிழவி இறங்கிப் போய்
அந்த இடத்தில் ஒரு அமர்க்கள அழகி ஒருத்தி ..
அதுவும் என்போலவே உறங்கிக் கொண்டிருந்தாள் ..
ஏதோ ஒரு நாராசாரத்திற்கு எனக்குத் தட்டிய விழிப்பு
அவளைத் தட்டவே இல்லை.. !!
தெளிவான அவளது உறக்கம் எனக்குள் சுவாரஸ்யம் ஏற்றி
எமது உறக்கத்தை நமுத்துப் போகச் செய்தது..
இனி நான் செத்தாலும்[?] தூங்கப் போவதில்லை
என்கிற உத்திரவாதம் என்னாலேயே எனக்கு வழங்கப் பட்டது.. !
அவளது படுக்கையறை சம்பவம் .. சுலபத்தில்
அதனை அருகாமையில் தரிசிக்க நேர்ந்ததில்
என்னை மூர்ச்சையாக்கும் முஸ்தீபில் என்னில் பெருமூச்சு..
"என்ன பொண்ணுடா இவ?" என்று விஷால் ஏதோ படத்தில்
பதறுகிற மாதிரி பதறும் எனதிதயம்... !
காற்றுக்கு மிதக்கிற அவளது மென்கேசம் ..
அவளின் நாசி நேர்த்திக்கு ஈடாக மறுத்தது அந்த ஒற்றைக் கல் மூக்குத்தி..
சீராக அவள் உள்வாங்கி வெளிவிடுகிற நிசப்த மூச்சு..
எமது குறட்டையோடு ஒப்பீடு செய்யப் பட்டுக் குட்டிக் கொண்டது மனது..
அவளின் அந்த அற்புத உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள என் தோள் துடித்தது..
அப்படியே அவளைச் சாய்த்துக் கொள்ள என் மடி முண்டியடித்தது..
குயிலெனக் கூவும் அவள் உறக்கத்துக்காக
என் நரியூளை உறக்கத்தை தீயிட்டுப் பொசுக்கத் துணிந்துவிட்டேன்..
மெல்லிய சாரலாக நனைக்கிற அவளது உறக்கத்துக்காக
என் பேய்மழை உறக்கத்தை நிறுத்திவைக்கிற முடிவெனக்கு .. !
"ஏம்மா .. எறங்கற ஸ்டாப் வந்தா கூட உங்களுக்கெல்லாம் தூக்கம் கலையாதா ?" என்கிற நாசுக்கற்ற கண்டக்டரின் நாறவாயை
நாய்க்கு வெட்டிப் போடவேண்டும் என்று என்னில் மூள்கிற கோபம்..
அழகிய பூவை செடியிலிருந்து வெடுக்கென்று பறித்துப் போட்டு அதனை காலில் வேறு நசுக்கிய மாதிரி பதறி விழித்தாள் அந்தப் பெண்..
நானும் இறங்கிக் கொண்டேன் அவளது நிறுத்தத்திலேயே..
3 அல்லது 4 மணிநேரப் பயணம் நான் இன்னும் அடைய வேண்டிய தூரம்..
அடுத்த பேருந்துக்குக் காத்திருக்கிறேன்..
அவள் பின்னாடியே போய் விடமுடிகிற சாத்தியக் கூறுகளை அனாவசியத்துக்கு அலசிக் கொண்டிருக்கிறேன் ..
ஒரு ஈயாக மாறியிருந்தால் போயிருக்க முடியும் என்று அடுத்த பேருந்தில் பயணிக்கையில் யோசிக்க முடிந்தது என்னால்.. !!

இப்படி எல்லாம் சிந்தனை "ஓடு"தா...?
ReplyDelete