Tuesday, February 24, 2015

அறிவு தவிர்..

பறக்கும் திராணி அற்றிருந்த 
அறியாமைச் சிறகுகளோடு 
நான் உச்சி சென்று 
குதித்திருக்கிறேன்.. 
வானம் தொட 
முயன்றிருக்கிறேன்.. 
அப்போதெல்லாம் 
காயங்களோ உடற்சேதாரமோ 
வலிகளோ நேர்ந்ததாக 
ஞாபகமில்லை.. 

இன்றைய முதிர்ந்த 
அறிவுச் சிறகுகளோடு 
மெல்ல நடந்தாலுமே கூட 
இடறுகின்றன கால்கள்.. 
காயங்களும் வலிகளும் 
கற்பனையில் வந்தே 
அதீத வலிகள் நிகழ்த்துகின்றன.. !

ஐந்தறிவு அஜாக்கிரதையோடு 
மின்சாரக் கம்பிகளிடையே கூட 
கண்ணாமூச்சி விளையாட 
சாத்தியப் பட்டிருக்கிறது.. 

இன்றைய பகுத்தறிவுகளும் 
ஜாக்கிரதை உணர்வுகளும்  
நான்கு பூட்டுக்களை 
வாசற்கதவுக்குப் போட்டும் கூட 
நடுவீட்டுக்குள் திருடன் வந்து 
கழுத்தில் கத்தி வைத்துவிட்ட 
பீதியுள் உறைந்து கிடக்க  
விழைகிறது.. !!

1 comment:

  1. நாம் மாற வேண்டும்... இல்லையெனில் அவஸ்தை தான்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...