Monday, July 27, 2009

halo.
it is very ecstasy to hear about my followers.
welcoming me and my tamil is very enthusiastic.
i like to thank u all and i promise, i will convey my feelings into words.... on coming days.
always i will be thankful to my dear friend vijayashanker.
regards,
v.sundaravadivelu

5 comments:

  1. நிறைய தமிழ் எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

    உங்கள் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்தாலே போதும், நிறைய விஷயம் கிடைக்கும்.

    ReplyDelete
  2. பட்லர் இங்க்லிஷ்லே எழுதறத நிறுத்திட்டு, தமிழிலே சுவாசியுங்க!

    ReplyDelete
  3. எதேச்சையாக உங்கள் தமிழை படித்தேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள். எழுதிக்கொண்டே இருங்கள். நல்ல வளமை வரும்!

    ReplyDelete
  4. என் மதிப்பிற்குரியவர்களுக்கு,
    நான் சுந்தரவடிவேலு.
    பற்பல அவஸ்தைகளுடன் அவ்வப்போதில் சில சந்தோஷங்களும் எல்லோர் வாழ்விலும் எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிடக்கூடும்.
    பாறை மாதிரியாக சலனங்கள் வீற்றிருக்கும். அதன் மீது சிட்டுக்குருவி போல ஓர் தெளிவு வந்து விட்டுப்போகும். தத்தித்தத்தி குதித்த வண்ணம் அந்தச்சின்ன அலகுகளால் கொத்திக்கொத்தி எதையேனும் சாப்பிடுவதை பார்க்க எவர்க்கு அலுக்கும்? மனமொன்றி ரசித்துக்கொண்டிருக்க இருக்கவே சரக்கென்று பறந்து விடும். சந்தோஷங்களும் அதே வகையறா தான். எந்த ஷணத்தில் பறந்து விடுமோ என்கிற "கவலைகளுடன்" நம்முள்ளே எப்போதேனும் வந்து போகிற தன்மையில் உள்ளது.
    பக்கம் சென்று சிட்டுக்குருவியின் தலையை வருடி, அதன் க்ரீச் சப்தங்களை செவிகள் குளிர கேட்டு, உங்கள் ஆள்காட்டி விரலில் குருவியை உட்கார வைக்கிற அளவிற்கு........உங்கள் மனசுள் சந்தோஷத்தை உட்கார வைக்க வேண்டுமாயின் ,...
    ஆழ்ந்த யோகாவை பயிற்சிக்குக்கொண்டு வரவேண்டும் என்பது நன்கு யோகா கற்று உணர்ந்தவர்களின் பேரனுபவமாக இருக்கிறது.
    கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானும் யோகா கற்க முயல்கிறேன். இன்று வரைக்கும் முடியவில்லை.
    நானெல்லாம் சிட்டுக்குருவியை சுட்டுச்சாபிடுகிற ஜாதி. கிடைக்கிற சந்தோஷங்களயுமே கூட உடனுக்குடனாக விழுங்கி விட்டு கவலைகளை மட்டுமே பத்திரப்படுத்தி வருடிக்கொடுக்கிறேன். அவைகளும் என்னிடம் போஷாககாய் வளர்ந்து வருகின்றன.

    இன்னும் பகிர்வேன்,
    சுந்தரவடிவேலு.
    28/07/2009. திருப்பூர்.

    ReplyDelete
  5. அன்பான அனைவருக்கும்,
    என்னையும் தமிழையும் பாராட்டுகையில் சந்தோஷம் எனக்குள் பயித்தியம் பிடித்தாடுகிறது. புகழ் மீதான எனது பிரக்ஞை எனக்கே வெட்கமாயிருக்கிறது.
    மிகவும் நன்றி, ரங்கன், ராசு, சின்மயி யாவருக்கும்.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...