Wednesday, November 5, 2014

ரூம் போட்டு யோசிச்சேன்.. ??

முன்குறிப்பு.. 
boss .. இது என்னோட ஸ்மால் இமேஜினேஷன்.. எங்கயாச்சும் என்னோட ஓன் எக்ஸ்பீரியன்ஸ் ன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க.. 

பைக்கில் போய்க் கொண்டிருக்கையில், சூப்பர் ஃபிகர் ஒன்று தன்னை சில பல கி.மீ. தள்ளி ட்ராப் செய்ய சொல்கையில், எவனாவது 'ஸாரி மேடம் .. நீங்க நடந்தே போங்க.. நான் மாட்டேன்' என்று சொல்கிறவன் இந்தப் பிரபஞ்சத்தில் தேடினாலும் கிடைப்பானா?

'நடக்க முடியாமல் தள்ளாடுகிற ஒரு நோயாளியை, ஒரு வயதான கிழவன் கிழவியை மாத்திரம் தான் என்னால் ட்ராப் செய்ய  முடியும்.. நீங்கள் வேறு யாரையாவது ட்ராப் செய்யச் சொல்லுங்கள்' 
என்று சொல்கிற மனிதனை எப்படிப் பட்ட பேரழகியும் மணந்து கொள்ளலாம்.. 
ஆனா நைனா, நாட்டுநடப்பு அப்டி இல்லே... பேஞ்ச மழைக்கு இளப்பு வந்து மூச்சு விடறதே சிரமமா இருக்கற அம்மாவ அவசரமா ஆசுபத்திரிக்கு பைக்ல வச்சு கூட்டிக்கிட்டு போற போதே, ஒரு வத்தல் ஃபிகர் கையைக் காட்டி 'அண்ணே.. அவசரமா ராயல் தியேட்டர் போகணும்.. படம் போட்ருவான் .. ஆயாவ கொஞ்சம் வெய்டிங்ல போட்டுக்கிட்டு ட்ராப் பண்ணிடுங்க' என்றாலே போதும்.. 
'அம்மா நீ அப்டியே அந்த மரத்தடியில குந்திக்கினு இரு.. இந்த பாப்பாவ விட்டுட்டு வந்துடறேன்.. அப்டி யாராச்சும் உன்னை ஆஸ்பத்திரியில போயி விடறதா இருந்தா ஓகே சொல்லி ஏறிக்க .. நான் டைரக்டா அங்க வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்.. பெட்ரோல் போட ஒரு அம்பதோ நூறோ சுருக்குப் பய்யில இருந்தா குடு'.. என்பான் என்றால்..  

-இப்டி ஒரு மனுஷனை குஷ்டம் புடிச்ச விபச்சாரி கூட கட்டிக்க மாட்டாள்.. 

ஆனா உலகம் அப்டியா இருக்கு?.. செட் ஆகற சல்லி ஃபிகர் கூட, பார்ட்டி வெய்டானவனா ன்னு தான் ஸ்கேன் பண்ணிப் பார்க்குதுக.. இருக்கற கோவணத்தையும் உருவி ரிப்பனா கட்டிக்கத்தான் நெனைக்குதுக தவிர, 'இந்தா.. உன்னோட பொண்டாட்டி புள்ளைங்களுக்கு எதாச்சும் வாங்கிட்டுப் போ' ன்னு அன்பா ஆதரவா எந்தப் பொம்பளையும் பேசறதா காணோம்.. 

அப்டி பேசறவளா, பேசி மனசார செய்யறவளா இருந்தா நிச்சயம் அவளை 2 வதா கூடக் கட்டிக்கலாம்.. ?? ஹிஹி.. 


2 comments:

  1. வீட்டிற்கு வந்து பேசறேன்...! ஹா.. ஹா...

    ReplyDelete
  2. boss.. பாஸ். எங்க போயிட்டீங்க இத்தன நாளு ?.. உங்க பராமரிப்பு இல்லாம, என்னோட BLOG DOG இளச்சே போச்சு..
    இனியாச்சும் போஷாக்கா இருந்து கமெண்ட் என்கிற pedigree போடுங்க.. அப்பா தான் ஊட்டமா வளரும்..
    வாங்க பாஸ் வீட்டுக்கு..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...