Monday, November 3, 2014

கத்தி.. film review..

கத்தி பார்த்தனுங்கண்ணா ....
கழுத்தை அறுத்துட்டாங்க.. விஜய் , முருகதாஸ், அனிருத், இப்படிக் கூட்டுக் கலவையோடு கூட்டுக் களவாணிகள் போன்று மனுஷனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டிருக்கிற இவர்களது கைங்கர்யம் தாங்கலைப்பா  ரகம் ...

என்னவோ நாட்டை திருத்தறேன் பேர்வழி என்று இருக்கறவனை கொடஞ்சு எடுத்துட்டாங்க..
தெளிவில்லாத பாடல்கள்.. , எரிச்சலூட்டும் இரைச்சல் பின்னணி இசை. 

டபுள் ஆக்ட் விஜய் .. எதற்கு டபுள், எப்டி டபுள் என்பவை எல்லாம் அன்றைய எம்ஜியார் சிவாஜி படங்களில் தான் விளக்கியாக வேண்டும்.. இங்கெல்லாம் அது ஹ்ம் ஹ்ம் ... 

ஒருத்தர் பரம சாதுவாம், படிப்பாளியாம்.. இன்னொருத்தர், ஜெயில் கைதியாம், ஆனால் அந்தப் படிப்பாளி விஜய்க்கு பதிலாக வந்து கச்சை கட்டிக் கொண்டு அசத்துகிறாராம்.. 

படம் நெடுக அத்தனை விவசாய வயோதிகர்கள்.., அவர்களது அஹிம்சைப் போராட்டங்கள், அரசாங்கத்தை திருப்புவதற்கான தற்கொலைகள்.. 
விவசாயிகளின் அன்றாட அல்லல்களை, மேற்கொண்டு நாட்டில் விவசாயத்தை நிலைநிறுத்த வேண்டுமென்கிற அதி தீவிரப் பிரச்சாரமாக இந்தப் படம் பிரதிபலித்துக் காண்பிக்க வேண்டுமென்று மிகமிக மெனக்கெட்டு இருக்கிற முருகதாஸ் குழுவுக்கு பாராட்டுக்கள் எனிலும், அவர்கள் அனுமானித்த மாதிரி அப்படி பிரம்மாதவாகவெல்லாம் இந்தப் படம் எதையும் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.. 

படத்தின் ஆரம்ப அரைமணி முக்கால்மணி நேரங்கள் பக்கா அமெச்சூராக ....
முந்தைய பல ஹிட் படங்கள் கொடுத்த ஒரு தேர்ந்த டைரக்டரின் எந்த அடையாளங்களும் அற்று , ஒரு சாதாரண குறும்படம் எடுக்கிற மண்டு டைரக்டரின்  காட்சி அமைப்பு போன்று சொதப்பலாக இருந்தது.. 

பிற்பாடு மெஸேஜ் ஒன்னு சொல்றேன் பாருன்னு சொல்றாரு சொல்றாரு.. நெசமாலுமே பட டைட்டில் மாதிரியே தான் படமும்.. 
கொஞ்சம் ஷார்ப்பா கத்தியத் தீட்டி கழுத்தை அறுத்திருந்தா கூட உடனடியா செத்துப் போயிருக்கலாம்... ஆனா, ஒரு மொன்னக் கத்திய வச்சுக்கிட்டு போட்டு ராவுன ராவுல நம்மை எல்லாம் கொத்துசுரா கொலையுசுரா ரணகளம் பண்ணுன புண்ணியம் முருகதாஸ் விஜய் குழுவையே சாரும்.. 

இதையெல்லாம் பார்த்த பெறகு விவசாயிக பண்றாங்களோ இல்லையோ நாம  சூஸைட் பண்ணனும் போல ஒரு வெறி, ஒரு வெறுமை படம் விட்டு வெளி வருகையில் படர்வதை தவிர்க்க முடியவில்லை.. 

ஆனால், நல்லவேளையாக ஆண்டவன் நமக்கெல்லாம் வாரி வழங்கி இருக்கிற அந்த மறதி  என்கிற ஆயுதத்தை வைத்துக் கொண்டு முடிந்த வரைக்கும் இந்த மாதிரியான படங்களுக்கு உபயோகிக்க வேண்டியாகிறது.. இதையெல்லாம்  மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பவன், நிச்சயம்  முருகதாஸுக்கு  அசிஸ்டன்ட் ஆக சேர்ந்து கொள்ளலாம்.. 

ஐயோ ஐயோ.. 

2 comments:

  1. உண்மை சுந்தர் .......
    முருகதாஸ் கிட்ட நிறைய எதிர்பார்த்து போன, கடைசிள கிடைச்சது .......
    அவர் சொல்ல வந்த கருத்து சரி, அனால் ஹீரோவுக்காக கதையை மாற்றி , தானும் குழம்பி , நம்மளையும் குழப்பி........... ஐயோ ஐயோ னு கத்த (கத்தி) கத்த குத்தி கொன்னுட்டார் ........ இதில் டிவி ல இது மிகபெரிய வெற்றி (வெட்டி) படம்னு.... சுந்தர் முடிந்தால் குறையொன்றும் இல்லை படம் பாருங்கள்..... அனைவரும் புது முகம்., நல்ல முயற்சி....... படத்தில் சில குறைகள் இருந்தாலும் படம் ஓகே ரகம்.....

    ReplyDelete
  2. THANKS MR.SARAVANAN.. YEAH, SURE I WIL TRY TO WATCH KURAI ONRUM..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...