Friday, November 21, 2014

வெள்ளை இருட்டு..

எங்கெங்கிலும்
வியாபித்திருக்கிற
வெறுமை குறித்த
பிரக்ஞை எவர்க்குமில்லை...

-வீரியமில்லாத
பிரச்னைகள் குறித்து
மிகவும் குவிக்கப்
பட்டுள்ளன எல்லாரது
இதயங்களும்...

கவனிக்கப் படாத
அடர்ந்த இருளினூடே
கிஞ்சிற்று சிதறிக்
கிடக்கிற வெளிச்சம்
குறித்து அதீத கவனம்
எல்லாருக்கும்..

வெளிச்சம்
அணையக் காத்திருக்கிறது..
இருளோடு ஐக்கியமாக
முயல்கிறது..

இருட்டுக்கு ஒன்றும்
வெளிச்சம் தேவைப் படாது.
வெளிச்சம் மட்டுமே
எப்போதும் இருட்டை
விரட்டுகிற முயற்சியிலேயே
இருட்டோடு கரைந்து போகும்.. !!


2 comments:

  1. வித்தியாசமான தலைப்பு " வெள்ளை இருட்டு" வெள்ளை என்பது வெளிச்சத்தை குறிக்கும், இருட்டு - கருப்பு ..... வீரியமில்லாத
    "பிரச்னைகள் குறித்து
    மிகவும் குவிக்கப்
    பட்டுள்ளன எல்லாரது
    இதயங்களும்"...உண்மையில் சுந்தர வடிவேலின் கற்பனை சுந்தரம்..... வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. oh really thank you very much for yr sincere observation saravanan..

      Delete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...