கட்டெறும்பை நசுக்கி துவம்சம் செய்யப் பிரயத்தனித்த என் 6 வயது மகளிடம் அவசரகதியாக நான் சொன்னேன்..
"பாப்பா அதை நசுக்காதே.. அப்புறம், அதை காணோம் என்று அதன் அம்மா எறும்பு தேடும்.. காணவில்லை என்று கவலைப் படும்.. செத்துப் போய் விட்டது தெரிய வந்தால் சோகத்தில் கதறி அழும்.. ப்ளீஸ் விட்டுடு பாப்பா.. "
இப்படி நான் சொன்னதும் அவள் அதை விட்டுவிட்டாள் .. எனக்குமே கூட நான் அப்படி ஒரு கற்பனையோடு சொன்னது சற்று ஆச்சர்யமாக இருந்தது..
அது நான் அனுமானித்தது போல கற்பனையாக இல்லாமல் உண்மையாகவே இருந்து விட்டால்?..
குட்டியைக் காணவில்லை என்று நாய் அலைமோதுவது இல்லையா?.. கன்று கண்ட பசு பாலை சுரப்பதில்லையா?.. பசுவைக் கண்ட கன்று பரவசமாகித் துள்ளிக் குதிப்பதில்லையா?
ஆனால் ஈக்கும் எறும்புக்கும் மாத்திரம் எதுவுமில்லை போன்றே நமதறிவுக்கு எட்டுவது வேடிக்கையாக இல்லை?..
சுரவிய தேங்காயின் துகள் கீழே சிதறிவிட்ட அடுத்த நிமிடம் வரிசை கட்டிக் கொண்டு படர்ந்து விடுகிற எறும்புக் கூட்டத்தின் அறிவு கவனிக்கையில், நிச்சயம் அவைகளுக்குள்ளும் ஒரு பிரம்மாண்ட உலகம் விரிந்து கிடக்கக் கூடும் என்கிற சிந்தனை துளிர்க்கிறது..

அருமையான சிந்தனை....
ReplyDeleteஉண்மை....
thank you sir..
ReplyDelete