காமம் குறித்தான விஷயங்களை அலசி ஏதேனும் எழுதுகையில், அதற்கான தலைப்பை சற்றே கவர்ச்சியாக வைக்கையில் உடனே அது எல்லாரையும் கவரும் விதமாக அமைந்து "படித்தவர்கள்" பட்டியல் மிக நீண்டு விடுகின்றன..
ஆனால் சத்தான சாரமான விஷயமாக இருப்பினும் அதனை உருப்படியான தலைப்பற்று வெறுமே ஓர் மனதில் ஒட்டாத தலைப்பாக கொடுக்கிற பட்சத்தில், சீந்த ஆளில்லாமல் போகிறது ..
நான் இந்த பிளாக் எழுதுகிற ஓர் விஷயத்தை மட்டும் மையமாக வைத்து இந்தக் கருத்தை சொல்லவில்லை.. எல்லா ஊடகங்களிலும் இதே கதி தான் நேர்கிறது..
பிரபல இந்தியா டுடே கூட இதைத்தான் அவ்வப்போது செவ்வனே செய்துகொண்டு வருகிறது.. செக்ஸ் சர்வே என்கிற ஓர் பிரம்மாத தலைப்போடு வெளிவருகிறது.. அதற்கான விளம்பரங்கள் பல மாதங்கள் முன்னரே பிரபலமாகி விடுகிறது.. சொல்லப் போனால், அந்த இஷ்யூவை கடைகளில் காசு கொடுத்து மாத்திரமே வாங்கமுடியும்.. வழக்கமாக ரெஜிஸ்டர் போஸ்டில் வருகிற இதழ் நிச்சயம் மிஸ் ஆகிவிடும்.. போஸ்ட் மேனைக் கேட்டால் ஏதேனும் ஜவாப் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்..
இப்படியாக, அந்த மனிதப் புணர்தல் ஓர் பிரத்யேக முக்கியத்துவம் பெறுவது இன்று நேற்றல்ல.., தொன்று தொட்டு நிகழும் ஓர் ஜொள் பிரளயம்..
காமம் ஓர் அலுக்காத கவிதை போல மனிதனின் நிறைவுக் காலம் வரைக்கும் அவனைப் பற்றிக் கொண்டும், படர்ந்து கொண்டும் ஊடுருவி வழி நடத்துகிறதெனில் அது மிகையன்று..
காமம் மலரினும் மெல்லிய விஷயம் தான்.. ஆனால், அது இந்த சமூகத்தில் பரவிக் கிடக்கிற விதம் தான் அபத்தமானது.. கட்டிய மனைவியோடு பத்து செகண்ட் பேசவே சலிப்பைக் காண்பிக்கிற புருஷர்களும், கணவர்களிடம் தக்காளி தேங்காய் மட்டுமே வாங்க சொல்லி விட்டு மேற்கொண்டு பேசுகிற
யோக்யதையே இல்லை என்பது போல உடனே துண்டித்து விடுகிற பத்தினிகளும்... கள்ளப் புருஷர்களோடும் கள்ளக் காதலிகளோடும் மாத்திரம் மணிக் கணக்கானது நொடிகளாக நழுவுவது போன்ற லாவகத்தோடு பேசித் தீர்ப்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை..
உலகின் எல்லாப் பிராந்தியங்களிலும் இதே கள்ளக் கதைகள் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை... அரற்றித் தான் என்ன பயன்?
இதனிடையே ராமர்களும் சீதைகளும் இல்லாமல் இல்லை.. ஆனால், ராவணர்கள் பெருவாரியாக விரவிக் கிடக்கிற இந்த சாக்கடையில் --அவர்கள் அடையாளப் படாமல் இருக்கிறார்கள்.. அல்லது தாமரை என, தாமரை இலை என ஜொலித்துக் .கொண்டிருக்கிறார்கள்.
ஓர் தேர்ந்த சினிமா விமரிசனம் போல, இந்தக் காமம் குறித்து தர்க்க ரீதியான விமரிசனங்கள் மிகவும் அவசியம்.. சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற விதமாக இந்த ஒழுங்கீனத்தை நாம் பதிவிறக்கம் செய்வது அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.. நான் ஓர் சிறிய வட்டத்துக்ககுள்ளாக இருந்து கொண்டு இத்தப் பெரிய விஷயத்தை வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக முன்வைப்பது எனது அவசரமும் அதிகப் பிரசங்கமும் ஆகக் கூடும்..

நீங்கள் சொல்வது சரி தான்...
ReplyDelete