Friday, September 4, 2009

என் 1998-ஆம் வருட உளறல்கள்....

என் நிழலுக்கும் ஸ்மரணை உண்டு.. என் நிழலை நீ ஸ்பரிசிக்கையில்....

என் நிஜத்தை முள்ளே தைத்தாலும் நோகாதடி.... உன் பார்வைகள் என்னைத்தவிர்த்தாலோ மொத்தமும் நோகுதடி...

என் கனவில் வந்து நீ என் கன்னம் அறைந்தாய்... விழித்துப்பார்த்தால் உன் விரல்களின் ரேகைகள்...

உன் சுவாசக்காற்றில் வண்ணங்களைக் காண்பவன் நான்... இலக்கணப்பிழைகளுடன் என்னைச்சூழ்ந்திருப்பவர்கள் உளறிக்கொண்டே கிடக்கிறார்கள்..,

இலக்கண சுத்தமான உனது மௌனம் , என் கவிதைகளுக்கு தீனி போடுதடி...

சுந்தரவடிவேலு...

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...