எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைத் தெரியாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாதென்றே கருதுகிறேன். தமிழ் மொழி மட்டுமே தெரிந்திருந்து ஜெயகாந்தனை இன்னும் தெரியாமல் இருக்குமேயானால், தமிழைத் தெரிந்து வைத்திருப்பதே வீண் என்று சொல்வேன்.
எனக்கு முதலில் அறிமுகமான கதைப்புத்தகமே அவருடையது தான். அவருடைய கதைகளையும் அதன் நியாய தர்மங்களையும் உணர்ந்து சிலிர்க்கிற அனுபவங்கள் மகோன்னதமானவை...!
மற்ற எழுத்தாளர்கள் எனக்குத்தெரிந்து வெறுமனே வீரியமாய் மட்டும் எழுதுவார்கள், மேடையில் ஓர் ஐந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல உரையாட முடியாமல் அதிகம் தளும்புவார்கள். ஆனால் நிறைகுடமான ஜெயகாந்தன் எழுதுகிற அதே வீரியத்துடன் மேடைகளிலும் பட்டை கிளப்புவார்..
தயவு செய்து அவரது சிறுகதைகளையும் நாவல்களையும் படிப்பீர்களாக...
இன்னும் அவர் குறித்து அதிகம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரை விளம்பரப்படுத்துவது பூக்கடை விளம்பரம் போலாகி விடும்..பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
//ஜெயகாந்தனை இன்னும் தெரியாமல் இருக்குமேயானால், தமிழைத் தெரிந்து வைத்திருப்பதே வீண் என்று சொல்வேன்.//
ReplyDeleteஇந்த நிமிடம் வரையிலும் அவரின் ஒரு வரி கூட படித்தது இல்லை. அவருக்கு அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை தொடர்ந்தவன் இன்னமும் அவர் எந்த புத்தகமும் படிக்கும் சூழ்நிலை வாய்ப்பே அமையவில்லை என்பது தான் உண்மை. எனக்கே ஆச்ரியமாக உள்ளது. அத்தனை பேர்களும் இத்தனை தூரம் புகழ்வது மிகுந்த வியப்பு அவருடைய ஆளுமை குறித்து. நிச்சயம் இழப்பு உண்மை தான். உங்கள் வார்த்தைகள் தான் சற்று பயமாக உள்ளது.