Tuesday, September 29, 2009

யாவும் மாயை...

அவதூறுகளும் கவலைகளும்ஆக்ரமித்துள்ள தருவாய்களில்எல்லாம் தனது கவிதைகளில்
அவைகளை பிரதிபலிக்க செய்வது கவிதை எழுதுபவர்களின் இயல்பு...

தங்கள் மனபாரங்களைஇறக்கி வைக்கிற தளமாய்விளங்குகிறது கவிதை... அதனைப்படித்து ரசிப்பவர்கள் அந்த பாரத்தை சற்று சுமக்கிறார்கள்., அதன் சோகம் கருதி விக்கித்துப்போகிறார்கள்., தங்கள் வாழ்விலும் முன்பொரு நாள் அவ்விதம் நிகழ்ந்து... ஆனால் அதனை இப்படி வார்த்தைப்படுத்த முயலாமல் வெறுமே உணர்ந்ததை .. இன்று அந்தக் கவிஞர் தன் கவிதையில் பிரதிபலித்திருப்பதைப்பார்த்து மெய் சிலிர்க்கிறார்..

தன் மன உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டதாக அவருக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். அதில் அந்தக் கவிஞர் நெக்குருகிப்போகிறார். தனக்கு நேர்ந்த அதே துன்பானுபவம் இன்னொரு நபருக்கும் நேர்ந்த விபரீதம் குறித்த சங்கடங்களையும் மீறி அதனை அவர் படித்துணர்ந்து நன்றியையும் வேறு தெரிவித்து விட்டார் என்பதால் தனக்கு நேர்ந்த துயர் கூட தூசி போல தட்டப்பட்டு அந்தப்புகழ் மெருகில் மூழ்கி விடுவது கவிதை எழுதுபவர்களின் இயல்பென்று அனுமானிக்கிறேன்.

புகழ் என்பது வாழ்வாதாரம் இல்லை என்றாலும் அது மனசுள் நிகழ்த்துகிற கிறக்கம் லட்சம் வாட்ஸ் பல்பாகும்... பணம் எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது ஏதோ தற்காலிக சந்தோஷங்களை தூவி விட்டு ஓடி விடும்., ஆனால் புகழ் என்பது நிரந்தர வசந்தம் என்பது போல ரீங்காரமிடும்.. அதுவும் கழன்று ஓடிவிடக்கூடிய சாத்யக்கூறுகளுடன் தான் உள்ளது என்பதை பல விஷயங்களுக்காக பல முறைகள் புகழ் அடைந்தவர்கள் உணர்வார்கள்.. ஆரம்ப கட்ட புகழில் திளைப்பவர்கள் அதுவும் மாயை என்கிற நிதர்சனம் புரியாமல் குழம்பி பிற்பாடு பரிதாபமாகத்தெளிவார்கள்...!!



சுந்தரவடிவேலு

திருப்பூர்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...