Tuesday, September 8, 2009

இந்தியன் பயங்கள்....

நின்று கொண்டிருக்கிற
பேருந்தைக் கடப்பதென்றால்
சற்று பயக்காமல் இருக்க முடியாது...
எந்த ஜன்னலோரத்தில் எந்தக் கிழவி
வெற்றிலை பாக்கு எச்சில் உமிழப்
போகிறாளோ...
கடைசிக்கு, சிகப்பில்லாமல்
வெறும் எச்சிலைத் துப்பினால் கூட
தேவலாம்...!(?)
ஓர் டுபாக்கூர் மெஸ்ஸில்
பசியோடு பரோட்டாவை வாயில்
வைக்கையில் ,
வாஷ் பேசீனில் , எதாவது ஓர்
விவஸ்தை கெட்ட ஜன்மம்
காரி உமிழ்ந்து வாயை கொப்புளிக்குமோ
என்று பயக்காமல் இருக்க முடியவில்லை...!!
பொண்டாட்டியோடு ஓர்
குறுக்கு வீதியைக் கடக்கையில்
ஒரு இங்கிதம் கெட்ட
நாய், சிறுநீர் கழிக்க ஜிப்பைத்
திறந்து தொலையுமோ என்று
எப்படி சார் பயக்காமல் இருப்பது?
--அதே குறுக்கு வீதியில்
நாம் சிறுநீர் கழித்துக்
கொண்டிருக்கையில் ,
ஏதாவது ஒரு நாய்
தன் பொண்டாட்டியைக்
கூட்டிக் கொண்டு வந்து விடக்கூடாதே
என்று பயக்காமலும் தான்
இருந்து விட முடிகிறதா சாரே?

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

2 comments:

  1. வசனத்தை கவிதை என்ற பெயரில் என்ற வருத்தமாக இருந்தது படிக்கத் தொடங்கும் போது. ஆனால் இந்த வரிகள்

    எப்படி சார் பயக்காமல் இருப்பது?
    --அதே குறுக்கு வீதியில்
    நாம் சிறுநீர் கழித்துக்
    கொண்டிருக்கையில் ,




    மனம் சிரிக்க வைத்து சிறப்பு என்று முடிக்க வைத்தது.


    வாழ்த்துக்கள்,


    தேவியர் இல்லம். திருப்பூர்.

    ReplyDelete
  2. thanks jothig. sir. for yr comment

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...