இசை என்பது பலருக்கும் ஓர் மேம்போக்கான விஷயமாகவே உள்ளது...
திரைப்படங்களில் வருகிற பின்னணி இசை குறித்து கூட மிக சிலர் தான் கவனம் தெரிவிப்பதாகக் கருதுகிறேன். பலரும் வெறும் பாடல்களின் ரசிகர்களாகவும் அவைகளை முனுமுணுப்பதிலேயே திருப்தி கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
என்ன இசை ஒலிக்கிறது , அது எந்த இசைக்கருவியில் இருந்து ஒலிக்கிறது என்கிற புரிதல் கூட அற்று இருப்பது எனக்கு ஓர் வகைப்படுத்த முடியாத அசூயை ஏற்படுத்துவதாய் உள்ளது. அப்படி இருப்பவர்கள் குறித்து எனகென்ன இவ்வளவு அசூயை, அக்கறை , கவலை ? நான் என்ன பெரிய இசை மேதையா? என்கிற உங்களது மௌனமான கேள்விகள் எல்லாம் எனக்குக் கேட்கிறது..
எனது ஆதங்கம் எதுவான போதிலும் அதனை உரிமையுடன் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை நானே எனக்கு வழங்கிக்கொண்டுள்ளேன் என்பது எவரையும் புன்படுத்தாதென்றே கருதுகிறேன்..
இந்த இசை உணர்தல் தன்மையை இன்னும் சற்று விஸ்தாரமாக சொல்ல ஆசை படுகிறேன். இப்போதைக்கு, இது ஓர் சின்ன முன்னுரையாய் இருக்கட்டும்...
No comments:
Post a Comment