முன்குறிப்பு: எல்லாரும் எதையாவது ஜன்னலைத்திறந்து வெளியே தேடுவார்கள்..,
நான் ஜன்னலையே தேடுகிறேன்....
என் வீட்டின் இடிபாடுகளுக்கிடையே
என் அறை ஜன்னலைத்தேடிக்கொண்டிருக்கிறேன்...
--எனது பொழுதுகளை
அதிகம் அபகரித்துக் கொண்டவை அவை..!
என் அறைப்புழுக்கத்திற்கு
வெளிக்காற்றை சலிக்காமல்
விநியோகித்த சதுரம் அது..
எதைச்செய்தாலும்
ஓர் இழையில் மனசுக்கு
அலுப்புத் தட்டத்
துவங்கி விடும்..,
அப்போதெல்லாம் எனக்கு
சலிப்பில்லாமல் வெளி வேடிக்கை
காண்பித்த ஜன்னல்..
மின்சாரம் பறிபோய்
தொலைக்காட்சிப் பெட்டி
அணைகிற போதெல்லாம்
அதைவிட சுவாரசியங்களை
காட்சிகளாக்கிய ஜன்னல்...
வெயிலை அறைக்குள்
சதுர கோலமாய் அழகு படுத்திய ஜன்னல்...
மழை வருகையில்
நனைந்திருக்கிற ஈர வீதி காட்டி
கவிதை எழுதத் தூண்டிய ஜன்னல்..
---இன்று
புணரமைக்க இடிக்கப் பட்டிருக்கிற
எனது வீட்டின் இடிபாடுகளில் எங்கோ
தொலைந்து போனது போல
கண்களுக்குப் புலனாகாமல்
கவிதை கிறுக்க வைத்துக்கொண்டிருக்கிறது..
பின் குறிப்பு:
ஒரு வழியாக மீட்கப்பட்ட எனது அறை ஜன்னல், புனரமைப்பிற்குப் பிறகாக மீண்டும் எனது
அறையிலேயே புதுப்பிக்கப்பட்டது..
சுந்தரவடிவேலு, திருப்பூர்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Wednesday, September 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment