Saturday, September 19, 2009

மனிதம்...

சமயங்களில் நம்மை மிகவும் நேசிப்பவர்களை நாம் புறக்கணிக்க வேண்டிய கொடுமையான சூழல்கள் வாய்த்து விடுவதுண்டு..அது நமது திட்டம் தீட்டுதல்கள் என்கிற தன்மைகளை எல்லாம் மீறி மிக இயல்பாக, மிகவும் நியாயம் போல அநியாயத்திற்கு நிகழ்ந்து விடும்... அந்த வலிகள் வார்த்தைகளுக்கும் அப்பாலாய் கடினமான ஓர் உணர்வாய் மனசுள் படிந்து இறுகி, பின்னொரு நாளில் நம்மை நேசித்தவர்களை மீண்டும் நாம் அடைய நேர்கையில் .. இறுகிய யாவும் இளகி அவிழத்துவங்கும்... அன்று அவர்கள் நேசிக்கையில், அதனை நாம் புறக்கணிக்க நேர்ந்ததை காலத்தின் சதி என்பதாக அவர்களும் உணர்ந்து அதே நேசத்தை அவர்கள் காண்பிக்கையில் .. முழுதுமாக லே சாகி விடுவோம்...!

தவிர்த்திருக்கவே சாத்யப்பட்டிருக்காத அந்தப் புறக்கணிப்புக்கள் குறித்து பரிமாறுவதை தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு நேசங்களை அடர்த்தி செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆரோக்யமான தன்மை..

இன்னும் சில சந்தர்ப்பங்களில், வீரியமே அற்ற ஓர் விஷயத்திற்காக மனஸ்தாபம் கொண்டு பல வருடங்கள் பேசாமலே இருப்போம்.. அந்த சிறுமைகளை ஓர் இழையில் இருவருமே உணர்ந்து மீண்டும் உறவாட நேர்கையில் , அந்த நீண்ட அற்புதமான இடைவெளியை வெற்றிடமாக்கி விட்ட சூன்யம் இருவர் வசமும் மௌனமாய் அவஸ்தை கொள்ளச்செய்யும்...!

வாழ்க்கை மிகவும் குறுகியது...உன் மரணம் தான் நீண்ட ஆயுள் கொண்டது...உன்னுடைய தன்மைகளை அனுசரித்தே உன் மரணம் காலத்திற்கும் மறக்கப்படாமலிருக்கும்... நீ அற்பமானவனாக வாழ்ந்து கொண்டிருந்தால், வாழ்கிற காலத்திலேயே மறக்கப்படுவாய்...!!

இப்படியாகப்பட்ட வாழ்க்கை சூழலில் பரஸ்பரம் நேசங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து வருவதே பரம சுகம்.. அதையே நமது சந்ததிகளுக்கும் பயிற்றுவிப்பதை தலையாய கடமையாகவும் கொண்டோமேயானால் அமைதியும் நிம்மதியும் எங்கெங்கிலும் ஊடுருவிக்கிடப்பதைக் காண்போம்.

இன த்வேஷங்களும் காழ்ப்புணர்வுகளும் தீவிரவாதங்களும் மலிந்து வருகிற இன்றைய சமூக சூழலில், மனித உணர்வுகளையும் , மனித உயிர்களையும் போற்றத்தக்கதாக மதித்துப்பழக வேண்டும் என்பதே நமது எல்லாருடைய ஆவல் என்று கருதுகிறேன்...

மறுபடி பகிர்வோம்... சுந்தரவடிவேலு..

2 comments:

  1. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம், புத்தம் என்று பிரிவினைகள் உண்டே தவிர எந்த மதமும் ஒருத்தருடன் ஒருவர் மோதி எங்களின் உன்னதத்தை உலகிற்கு காட்டுங்கள் என்ற போதனையை சொல்லவில்லை.

    உணர்ந்தவன் உள்வாங்கியவன். உணராதவன் உளறலின் சார்பாளன்.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...