பிழையற்ற உனது மௌனங்களும்
அபஸ்வரமான எனது ராகங்களும்
ஒருங்கிணைய முயல்கிற விபரீதம்
தாங்கொணா அசூயை ஏற்படுத்துகிறது
எனக்குள்..
பூவை ஒத்த உன் மென்மைகளும்
சற்றும் அதிர்ந்திராத உன் பேச்சுக்களும்
பாறை ஒத்த எனது தன்மைகளுக்கு
மலை அளவு முரணாய் உணர்வது
என் பெருந்தன்மை தான் என்றாலும்..,
--என் மீது மய்யல் கொண்ட உன்
பெண்மை மீது லஜ்ஜை எனக்கு...
--உனக்கான ஆண் உன்னதமானவன்,
பேரழகன், கட்டுக்குலையாத காளை
ஆண்களே வியந்து விரும்பும் மேன்மை மிக்கவன்...
நீ மிதிக்கக் கூட லாயக்கற்ற பாதை நான்.,
நான் துதிக்க மட்டுமே சமைக்கப் பெற்ற தேவதை நீ...
உன் சேலையில் நூலாகும் தகுதி கூட அற்றவன் நான்.,
நீயோ என்னை உன் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாய்..!
அவிழ்த்து எறிய வேண்டுகிறேன்...!!
எனக்கானவள், மிக எளியவள், எழிலற்றவள்...,
நான் கிடைக்கவில்லை எனில் நீ மறிக்கப்போவதாகக் கேள்வி..
ஓர் சேற்றுப்பன்றி கிடைக்காமல் ஓர் புள்ளி மான் தற்கொலையா?
கோவில் கும்பாபிஷேகம் ஒன்றில் கூட்டத்தோடு கூட்டமாய்
ஒண்டி நிற்கிற ஓர் சாதாரண பக்தனை......குறைந்த பட்சம்
சாமியைச்சுமந்து வருகிற பல்லக்காய்
மாற்றலாம்...! --ஆனால் நீ என்னை
சாமியாகவே மாற்ற முயல்வது.... உண்மையிலேயே
என்னை உணர்ச்சியற்ற சிலையாக்கி
விடும் என்றே அனுமானிக்கிறேன்....!!
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Thursday, September 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment