அவரவர்களுக்கு வாய்த்த ஓர் தொழிலை மய்யப்படுத்தி -சம்பந்தப்படாதவர்கள் மீதெல்லாம் திணிக்கிற இயல்பு--- மனிதம் சார்ந்தது...
-முடி திருத்துகிற சலூன்காரர் தன் கடையை கடக்கிற நபர்களின் முகங்களைப் பார்ப்பாரோ இல்லையோ மண்டைகளை நிச்சயம் கவனிப்பார்.. தினத்தந்தி படிக்க வருகிற நபரைக்கூட , ஷேவிங்கா கட்டிங்கா என்பது போல பார்ப்பார்..
--அடுத்து தையல்காரர்....
ஆள் பாதியை மதிக்காமல் ஆடை பாதியை மட்டுமே அலசிக்கொண்டிருப்பார்..
--கசாப்புக் கடைக்காரர்..
கத்தரிக்காய் வாங்கக்கடந்து போனால் கூட "லெக்பீஸ் சார்...?" என்று கேட்டு மனசை அலை பாய வைத்து விடுவார்...
செருப்புத் தைக்கிறவர்-----
அப்போது தான் பாட்டாவில் புதியதாய் வாங்கி கால்களில் மாட்டியிருப்போம்..,
வார்அறுந்து தொங்குகிறதா என்று நோட்டம் விடுவார்..
விட்டால், காலையும் செருப்பையும் சேர்த்துக் கோர்த்து தைத்து விடுவார்...
--இப்படியாக எல்லாருமே அவர் அவர்கள் தொழில் தர்மங்களை தவமாய்க் கருதி வாழ்ந்து வருவதைப் பார்க்கையில் , எனக்கு விபரீதமாய் ஒன்று தோன்றுகிறது..
---நாமெல்லாம் சுடுகாட்டைக் கடந்து செல்கையில் , அங்கிருந்து வெட்டியான் நம்மைப் பார்ப்பான்..எதிர்காலப் பிணங்களாக?...
எதிகாலப் பிணங்களாக பார்த்தால் கூட தேவலாம்.. அவனும் தன் தொழில் தர்மத்தை நிலை நாட்டுபவனாக நிகழ்காலப் பிணங்களாகவே பார்க்க ஆசைப்பட்டால்?.....??
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
RX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
வித்யாசமான சிந்தனை. விபரிதமான சிந்தனை. ஆனால் உண்மையான உருப்படியான சிந்தனை. மிக நன்று. முடிந்தால் ஈர வெங்காயம் இடுகையில் நுழைந்து வைரமுத்து திருப்பூர் மின் மயானத்திற்கு பாடப்படும் பாடலை ஒலிக்கக் கேட்டுப்பாருங்கள். கூடவே வைரமுத்து பேச்சையும்.
ReplyDeletethanks jothiji...for yr comment.
ReplyDelete