Friday, September 11, 2009

ஆதலால்...

கவிதை புனைவதற்கு
நான் யோசிப்பவை எல்லாம்
என் கைகளுக்குக் கிடைக்காதவையே..

என் இழப்புக்களையும் ஏக்கங்களையும்
பிதற்றவே நான் கவிதைகளைப் பிரயோகிக்கிறேன்...
--ஆகவே, எனக்குக் கிடைத்தவைகள்
யாவும் கவிதைகள் அல்ல..!

கவிதைகள் அல்லாதன
சுலபத்தில் என்னை சேர்ந்திருக்கும்-என்
இதயம் அதில் சோர்ந்திருக்கும்...,

கவிதை குறித்த ப்ரக்ஞை அற்றவன்
வாழ்வில் கூட நான் ஏதேனும் கவிதையை
உணர்கிறேன்..., ஆனால்
கவிஞ்ஞன் என்ற இறுமாப்பில்
இறுகியவன் வாழ்வில் - சஞ்சலம் தான் தெரிகிறது...!!

நான் தேடுகிற கவிதைகள்
ஒருக்கால் எனக்குக் கிடைக்கிற பட்சத்தில்
அதன் மேன்மைகளை இழக்க நேர்ந்து
"கவிதைகள் அற்றன"வாகி விடுமோ
என அஞ்சுகிறேன்...

--நீ எனக்கு
அற்புதமான
கவிதையாக புரிபட்டாய்...
பார்வையிலிருந்து மறைந்தும் விட்டாய்..
மீண்டும் நான் தேடினாலும்
கிடைக்காதவளாகி விடு..
கவிதைகள் உன் வசம்
இழக்க நேர்வதை நான் விரும்பவில்லை..!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

2 comments:

  1. உரைநடையில் நீங்கள் இன்னும் என்னவெல்லாம் எழுதி இருக்கீங்க? ஈரம் படத்து விமர்சனம் போடுங்க!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...