Thursday, September 17, 2009

இசை குறித்து.. இசை குறித்து....இசை..

இசை குறித்து விளக்கமாக பின்னொரு நாளில் சொல்கிறேன் என்று பெரிய இசைஞானி போல உளறி விட்டேன் என்று கருதுகிறேன். நான் சொன்னதற்காக நீங்களும் ரொம்பத்தான் கன்னத்துக்குக் கை கொடுத்துக் காத்திருப்பதாக எனக்குக் கற்பனை வேறு...தமாசுடா சாமி...
இப்படித்தான், வாழ்க்கையில் நிறையப் பேர் தன்னை பலரும் கவனிப்பதான மாயையில் மல்லாந்து கிடக்கிறார்கள்... நாய் கூட சீந்தாது என்கிற உண்மை தெரிய வருகையில் ஒரு "மண்டக்கொடச்ச்சல்" ஒன்னு வரும் பாருங்க...அதெல்லாம் அய்யா ரொம்பவே அனுபவிச்சாச்சு...

--இருந்தாலும் நமக்குத்தெருஞ்ச ரெண்டு விஷயத்தை ஒரு பண்டிதன் பாணியில பீத்திக்கிற ஒரு சுகம் இருக்கே....அதையும் அனுபவிச்சா தாம்பா புரியும்...

இசை... வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வுகளை நம் மனசுகளுக்குக் கொணர்ந்து சேர்க்கிற வல்லன்மை கொண்டவை...
...அந்தப் பியானோவின் அனாயாச சிணுங்கல்கள் .. எப்படிப்பட்ட அடியாழக் காதலையும் உணர்த்தி விடும் ஆற்றல் கொண்டவை.
...அந்த சக்சொபோனின் மெல்லிய கதறல்கள், யாதொரு சோகத்தையும் கவிதையாக்கி விடுகிற வீரியம் கொண்டவை..
வயலின் மற்றும் கித்தாரின் மீட்டல்களாகட்டும், உதடு குவித்து காற்றினை ஊடுருவச்செய்து "ஒலியில் கலைடாஸ்கொபெ" காண்பிக்கிற புல்லாங்குழல் ஆகட்டும்,
கால்களையும் தலைகளையும் கோமாளிகள் போல ஆட்டிக்கொண்டே இருக்கச் செய்கிற தபேலா ஆகட்டும்...
எந்தக் கருவிகளும் அதன் அதன் பிரத்யேக தன்மைகளில் சோடை போவதே இல்லை...
---இதனையெல்லாம் கவனிக்கிற ரசிக்கிற ஆற்றல்களில் தான் சிலர் தவறி விடுகின்றனர்...
குறிப்பாக, திரைப்படங்களில் பின்னணி இசையை மிகவும் கவனிக்க வைத்த புகழ் இளயராஜாவைத்தவிர வேறு ஒரு இசை அமைப்பாளருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்....
இதனையெல்லாம் நான் சொல்லி என்ன ஆகப்போகிறது... அப்படி நீங்கள் கவனித்துத்தான் என்ன ஆகப்போகிறது..?
அவனவனுக்கு 1008 பிரச்சினைகள் தலைக்கு மேல் இருக்கிறது...இசையை கவனி, வெங்காயத்தை கவனி .....ன்னு -- இவன் சள்ளை தாங்கலைப்பா..

மறுபடி சந்திப்போம்..
சுந்தரவடிவேலு..

2 comments:

  1. நல்ல ரசனை. தொடர்ந்து எழுதவும் இதுபோல்

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...