எதுவுமற்ற வெறுமை
வந்து அவ்வப்போது
மனசை
சூனியமாக்கினாலும்
உன் நினைவுகள் வந்து
யாவற்றையும் நிரப்பி
என்னை நிறைகுடம்
ஆக்கி விடும்..
என் மனக்குளத்தில்
உன் பிம்பம் போதும்..
சலனம் ஏற்படுத்தி விடும்..!
எத்தனையோ பேர்கள்
கல்லெறிந்த போதெல்லாம் கூட
கலங்காமல் இருந்த
மனக்குளம்
இன்றுன் .. ஒரே பார்வையில்
பேரலைகள் படர்ந்து
துவம்சம் செய்து
புரட்டிப்போட்டு விட்டது என்னை..!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
No comments:
Post a Comment