உன் நிபந்தனைகளுக்குக்
கட்டுப்படுவதையே
சுதந்திரமாய் உணர்கிறேன்...
உன் யாதொரு வேண்டுகோளுக்கும்
இணங்கிடும் அவசரம்
எப்போதும் என் வசம்...!
என் எல்லா வட்டாரங்களும்
கல்லுளி மங்கனாய்
என்னை அபிப்ராயித்திருக்க,
--உன்னிடம் மாத்திரம்
என் தாமதத்தை நான்
மிகவும் அநாகரிகமாய் உணர்கிறேன்..!!
உன்னிடம் மட்டுமே
எனக்குப் பறந்து காண்பிக்க
வேண்டுமென்று தோன்றுகின்றது.,
--சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!
சுந்தரவடிவேலு, திருப்பூர்.
//உன்னிடம் மட்டுமே
ReplyDeleteஎனக்குப் பறந்து காண்பிக்க
வேண்டுமென்று தோன்றுகின்றது.,
--சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!// What a bird!
அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை
ReplyDeleteகடைசி வரி வரை அத்தனையும் அழகு, //சிறகுகள் சிதைந்த நிலையிலும் கூட..!!!// :-)