Sunday, May 8, 2011

கிறுக்கல்கள்....

என் மௌனம் பூக்கள் போன்றவை... மணக்குமோ என்னவோ தெரியாது, உத்திரவாதமாக  நாறாது....ஆனால் பேசினாலோ வாய்க்கும் உத்திரவாதம் இல்லை, வார்த்தைகளுக்கும் இல்லை.. எல்லாம் ஒரு சேர நாறக்கூடும்....

இயல்பான மௌனங்கள் வலிமை நிரம்பியது.., ஆனால் விரதம் சார்ந்த மௌனங்கள் செயற்கையான எரிச்சல் ஊட்டுபவை...காறிய சளியை வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு துப்புவதற்கான சந்தர்ப்பமே வாய்க்காமல், மறுபடி நீர்த்துப்போய் வேண்டா வெறுப்பாக விழுங்கி விட வேண்டிய அவஸ்தைகள் விரத மௌனங்கள்.... ஆனால் நினைத்ததை ஆனந்தமாகப்பேசி , தேவையற்றதை தவிர்த்து பேசவே பிடிக்காமல் மௌனிக்கிற மௌனம் தான் யதார்த்தமானது.., அவஸ்தையற்றது...

இப்படி ஒரு கருத்து சமுதாயத்திற்கு சொல்லி ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை... என்னவோ எதையேனும் அவ்வப்போது முணு முணுக்கப்பிடிப்பது போல எதையேனும் கிறுக்கவும் பிடிக்கிறது...slate கிடைக்கப்பெற்றதும் கிறுக்குகிற குழந்தை போல, பேப்பர் பேனா கிடைத்ததும் எழுதாமல் இருக்கவே முடியாத ஒரு வெறி போல .. ப்லோகினை திறந்ததும் கைகள் பரபரக்கின்றன... அர்த்தமாகவோ அனர்த்தமாகவோ எதையோ உளறிக்கிறுக்கி விடுகிற ஒரு சுகம் ... அலாதியானது...!!   


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...