Thursday, July 28, 2011

அன்றாட நிகழ்வு..

ஏதாவது மொபெடோ
பைக்கோ அவ்வப்போது
கால்களில் மோதி
அங்கும் இங்குமாக
காயங்கள் நிகழ்ந்த
வண்ணமே உள்ளன..
சைக்கிள் ஸ்டாண்டில் 
என் வண்டியை
போட்டுவிட்டு வருகையில்
பக்கம் நின்றிருக்கிற
ஏதாவது வாகனம்
அதன் கூரிய பாகத்தில்
என் கால்களை கீறி
விடுகின்றன..மேல்தோல்
பிய்ந்து ரத்தம் வராமல்
வெண்குஷ்டம் போல
எரிச்சலூட்டுகின்றன..

என்ன மருந்து தடவினாலும்
நான்கு நாட்கள்
ஓர் வலியுடன் இருந்துவிட்டுத்
தான் நகர்கின்றன காயங்கள்..

அப்படி காயப்படுத்துகிற
வாகனங்கள் மீது உடனடியாக 
ஓர் எரிச்சல்... அதுபோக
அதன் உரிமையாளன் மீது
ஓர் மகா எரிச்சல்...
ஒழுக்கமில்லாமல் அவன்
நிறுத்தி இருப்பதாக
வாதாடும் மனது மெளனமாக..!

எனது அஜாக்கிரதை குறித்தோ
அனாவசியமான அவசரம் குறித்தோ
ஒருமுறை கூட என்னை நான்
கண்டித்துக்கொண்ட ஞாபகமே இல்லை...

என் வண்டியை 
வெளியே எடுத்து வருகையில்
என் வண்டியே என்னை
காயப்படுத்துகிற சந்தர்ப்பங்களும்
நிகழும்...
அப்போது மட்டும் என் வண்டியை
கண்டபடிக்கு திட்டி விட்டு
மன்னிப்பும் கேட்டுவிட்டு
வீடு திரும்பிக்கொண்டிருப்பேன்...!!

சுந்தரவடிவேலு..

Wednesday, July 20, 2011

ஸ்கிரிப்ளிங்..??

என் கோபங்கள் எல்லாம்
சாது மிரண்டால் ரகம்...
அவனா இவன்
என்று ஆச்சர்யப்பட
வைப்பவை..
புது ரத்தம் ஊறிய
மெருகில் சோபை
தட்டி விடும் எனக்கு..
மேற்கொண்டும் இதே
கோபங்களை என்
எதார்த்த தன்மையாக
மாற்றி அமைக்கலாமே  என்கிற
சபலம் துளிர்க்கும்...
ஆனால் இயல்பான
தன்மை அந்த
சபலத்தை வேரறுக்கும்...

ரௌத்ரமும் காமம்
போல தான்...
காமம்
ரகசியமாக
வீரியம் காண்பிக்கும்..
ரௌதரம்
பகிரங்கமான
வீரியங்காட்டும்...

அதனதன்
தன்மையில் இரண்டுமே
வடிகால் தேடுபவை..
அவைகளின்
தேடல் முடிந்த
பிறகான
அமைதியும் ஆனந்தமும்
அலாதியானவை..

என்னவோ சொல்ல
ஆரம்பித்து எதிலோ
முடிக்கிற எனது
கவிதைகள் அநேகமுண்டு..
இதுவும் அவைகளில் அடக்கம்..!!

Thursday, July 14, 2011

ரூம் போட்டு யோசிப்பாங்களோ??


குழந்தையின் மலச்சிக்கல்
நினைக்கையில் நமக்கு
வயிற்றில் பிடுங்கும்..
இசி வெளி வர
அவள் முக்குவதைப்
பார்க்கையில் நமக்கு
அழுகை வரும்...

ஆயி போய் மூன்று
நாட்கள் ஆகியிருக்க...
இன்றைக்கு கண்டிப்பாக
டாக்டரைப் பார்த்தாக வேண்டும்..

இதுக்குப்போய் டாக்டரா
என்று குலவை பாடுகிற
பெரிசுகள்..
ஆசனவாயில் புளிக் கோலினைத்
திணிக்க சொல்கிற சிலர்..
சோப்பு நீர் கரைசல் கொடுக்க
சொல்லி சிலர்..
பழம் காய்கறி கீரை
அன்றாட உணவில் சேர்த்து
வந்தால் போதும்... சிலர்!!

இவை எதனையும்
செய்யாமல் குழந்தை
நிபுணரிடம் சென்றோம்..

ஊசி போட யத்தனித்த
டாக்டரிடம் 
பேய் கதறல் என் மகள்..
அழுத கையோடு
மூன்று நாள் இசியையும்
டாக்டர் அறையிலேயே
பீய்ச்சி அடித்துவிட்டாள்..

ஊசியை புறக்கணித்து
விடுவார்களோ என்கிற
பயம் டாக்டரிடம்...
ஆனாலும் இனி அதற்கான
தேவை இல்லை 
 என்பதும்
அவருக்குத்தெரிகிறது...
போட்டால் அசிங்கம்
என்பதும் புரிகிறது...

குழந்தையை எடுத்துக்
கொண்டு வெளிய வந்த
எங்களிடம் --
கம்பவுண்டர் நெருங்கி
பீஸ் கேட்கிறார்..
எதற்கென்று வினவிய 
எங்களிடம் சொல்கிறார்:
--குழந்தையை
பயமுறுத்தி மலச்சிக்கலைப்
போக்குவதும் ஒருவித
சிகிச்சை முறை..'

Tuesday, July 5, 2011

jagi vasudev's speech on female fertility

திரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உன்னதமான உரையினை கேட்பீராக...
நன்றி..


கேட்கிற எவரும் கசிந்துருகக்கூடும்..

அன்பு
சுந்தரவடிவேலு..

மனிதனை சீரழிக்கிற கோவில்கள்..



கோவில்களுக்கு போகாமல் இருந்தாலே சாமிகள் நம்மைக் காப்பாற்றும் ... வீடு தேடி வந்தாவது...ஆனால் பிரார்த்திக்க என்று கோவில்களுக்குள் நுழைந்து சாமிகளைத்தவிர்த்து , ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும் காதலுடனும் காமத்துடனும் .. பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதும் வாய் விட்டுபபேசிக் கொள்வதும்... உண்மையாகவே பிரார்த்திக்கலாம் என்று வருகிற ஓர் பக்தனைக்கூட நிலை தடுமாற செய்கிறது..அந்த பக்தன் கூட நாளடைவில் புத்தி மாறி.. பக்தி மாறி, பூங்காவாக பாவித்து கோவில்களுக்குள் அலைய விழைகிறான்..
அடிப்படை ஒழுக்கங்களை இழந்து, எந்த பிராந்தியத்தில் என்ன உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிற சாதாரண தன்மைகளை கூட பொலிவிழக்க செய்து ஓர் ஐந்தறிவு ஜீவன்  போல உலவி வருகிறான் மனிதன் என்பது வேதனையும் வெட்கமும் கொள்ள வேண்டிய விஷயங்கள்....அமைதியோடும் ஆனந்தத்தோடும் மெளனமாக அமர்ந்து தியானம் செய்கிற ஓர் தன்மையை ஒவ்வொரு நபருக்கும் பயிற்றுவிப்பதே இப்போதைய இந்தியாவின் பக்தி மார்க்கத் தேவை...
கோவில்களை நிறுவி கூட்டங்களை சேர்த்து பிரதோஷம் அம்மாவாசை பௌர்ணமி தேய்பிறை அஷ்டமி .. இன்னபிற விசேஷங்களை அனுஷ்டிப்பதென்பது , மனிதனின் வக்கிர புத்திகளுக்கு தீனி போடுகிற சமாச்சாரங்கள் ஆகும்.--இவைகளைத் தவிர்க்கும் பட்சத்தில்...கோவில்கள் வெறிச்சோடிக் கிடக்கும், வேதமறிந்த குருக்கள் புவாவுக்கு தகிடதத்தோம் போடவேண்டி வரும்...ஆனால் பொது மனித குலங்களின் ஒழுக்கம் மேலோங்கி விடும்...ஆனால்--எந்தக்காலத்திலும் இப்படி எல்லாம் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பது திண்ணம்...ஆனால் இவ்விதம் நடக்கிற பட்சத்தில் திரேதயுகம் மறுபடி புதுப்பிக்கப்படும்...
ஆனால் கலியுகம்---- வசீகரிக்கிற நரகமாகி  விட்டது எல்லாருக்கும்... இதனை விடுத்து எந்த சொர்க்கத்தை அணுகவும் எந்தப்பாமரனும், பணக்காரனும் தயார் நிலையில் இல்லை என்பது தான் நிதரிசனம்...


வி.சுந்தரவடிவேலு...

Thursday, June 30, 2011

பர்த்டே..

ஜூன் 30.. இன்றெனது பிறந்த நாள்... 
நானும் நடிகை போல வருடம் மறைக்க முயல்கிறேன்..
இந்த மாதத்தின் கடைசி நாள்... ஏதேனும் பிறந்த நாளில் எழுத வேண்டும் என்கிற சோபை...
என் பிறந்த நாளினை அடையாளம் வைத்திருக்கிற ஓர் நான்கைந்து பேர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்... சிலர், ஞாபகம் வைத்திருந்தாலுமே கூட, இவனுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி பெரிய மனுஷன் ஆக்கினா நம்ம கெளரவம்  என்ன ஆவது என்கிற போக்கில்...
எது எவ்வாறாயினும் பிறந்த நாள் என்பது ஓர் அற்புத உணர்வை மனசெங்கிலும் வியாபிக்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..
சிறு பிராயம் தொட்டு இந்த நாற்பத்தி சொச்சம் வயசிலும் பிறந்த நாள் என்பது சிலிர்ப்பை நிகழ்த்தும் வல்லன்மை கொண்டுள்ளது எனில் மிகையன்று...
இன்றைய இருபத்திநாலு மணி நேரங்களுமே நான் பிறந்து கொண்டே இருப்பது போன்ற ஓர் பிரம்மை...
நான் பிறந்தது எந்த ஷணத்தில் என்கிற ஓர் த்ரில்லிங்... 
பிறந்த நாளில் புதுத்துணி அணிந்த காலங்கள் மிக அற்புதம் நிரம்பியவை..
இன்றைய மனநிலையில் ஆயிரம் புதுத்துணிகள் என்னை அலங்கரிக்க தயார் நிலையில் இருந்தாலுமே கூட அன்றைய சிலிர்ப்பு மிஸ்ஸிங்...
ஒவ்வொரு வகை உணர்வில் பிறந்த நாள் கழிந்திருக்கிறது...

இந்தக்காலங்களில் வருகிற பிறந்த நாட்கள், என் ஆயுளை , அதன் எண்ணிக்கைகளை அதிகம் படுத்தி வருகிறதென்கிற அனாவசியமான சிறுபிள்ளைத்தனமான புளகாங்கிதம்...

இந்தக்கால சூழலில் ஒவ்வொரு வருடத்தைக் கடப்பதென்பதும் ஓர் பெரிய சாதனை போல மாயை ஏற்பட்டு வருவது வினோதமே...

விஷ் யு ய ஹாப்பி பர்த்டே டூ மீ......

இப்படி சுயமாக வாழ்த்திக்கொண்ட ஒரு நபரை அடையாளம் காட்ட எந்த வரலாறும் இல்லை...             

Monday, June 27, 2011

அவன் இவன்.. விமரிசனம்

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு திரை அரங்கு சென்று பார்த்த படம், அவன் இவன்..
பாலா படம் .. என்கிற ஒரே நம்பிக்கையில் சென்று பார்த்தால், மிக கேவலமாக இருந்தது படம்..
அருவருப்பான வசனங்கள்... அசூயை கொள்ள வைக்கிற காட்சிகள்...
சம்பந்தமே இல்லாமல், காரெக்டர்களை உள்ளே நுழைத்து .. அவர்களை உதைத்து இம்சிக்கிற காட்சிகள்... உதாரணமாக அந்த மாடுகள் சம்பந்தப்பட்ட திரைக்கதை சற்றும் ஒட்டாத ஒன்று...
அந்த வில்லனும் மனசில் நிற்காத ஒரு சாதாரண முக அமைப்புக்கொண்ட நபர்..

இந்த பாலா படத்தில் எப்பொழுது பார்த்தாலும் காவல்காரர்கள் மிக பலவீனர்களாகவும் கேணத்தனம் நிரம்பியவர்களாகவும், சண்டித்தனம் செய்பவர்களிடம் பயந்து நடுங்குபவர்களாகவுமே சித்தரிக்கப்படுவது ஆரோகியமற்ற ஒரு போக்கு...அது என்ன புத்தி சாலித்தனம் என்று பாலா நினைத்தாரோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

முந்தைய பிதாமகன், நான் கடவுள் படங்கள் எல்லாம் சற்று ரசிக்கவும் பாராட்டவும் உகந்தவைகளாக இருந்தன.. ஆனால், இந்தப்படம் பொதுக்கக்கூசுக்குள் பிரவேசித்து வந்த ஓர் தாங்கொணா அருவருப்பை ஏற்படுத்திவிட்டது... 

உதாரணமாக ஒரு அருவருப்பான வசனத்தை கவனியுங்கள்.. :
விஷாலை தேடி பெண் போலீஸ் வருகிறது..
தன் வாக்கி தாக்கி தொலைந்து விட்டதாகவும், அதனை விஷால் தான் சுட்டு விட்டதாகவும் சந்தேகித்து வந்து கேட்கிறார் அந்த பெண் அதிகாரி..

விஷாலின் அம்மா அம்பிகா விஷாலை அழைக்கிறாள்..
டே வாடா இங்கே.. உனக்கு எப்ப பார்த்தாலும் திங்க, பேல .. திங்க . பேல ... இதே தான் வேலையா? என்று கேட்கிறாள்..

கழுவீட்டு வாடா. அப்படியே வராதே..---- அம்பிகா..
கழுவாம வரதுக்கு நான் என்ன உன் புருஷனா?---- விஷால்..
பிற்பாடு விஷால் சொல்கிறார்.. :
அம்மா. மாவு மாவா போகுதுமா..

அதனை கேட்ட அம்பிகா சொல்கிறார்:
போனா போகுது உட்றா. அதை வச்சு போலிசுக்கு தோசையா சுட்டு தர முடியும்?

--இதனை ஹாசியம் என்று நினைத்து அம்பிகா சிரிக்கிறார்.. பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒன்றும் சிரித்ததாக தெரியவில்லை..
இப்படி ஒரு கேவலமான ஹாசியத்தை எப்படி பாலாவால் சிந்திக்க முடிந்தது.. இதனை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது..??

பெற்ற தாயிடம் மகன் கேட்கிறான் .. 
எம்மா நீ இந்த பிரா எல்லாம் போட்டுக்கறதே இல்லையா?
அம்மா சொல்கிறாள்: 
இந்த வயசுல அதுக்குத்தான் இனி கொறச்சல்?

இவைகளில் எல்லாம் என்ன ஹாசியம் நாகரீகம் இருக்கிறது?.. காறித்தான் துப்பத்தோன்றுகிறது... 

இதற்கெல்லாம் சப்பை கட்டு கட்டி குமுதமும் விகடனும் விமரிசித்து மதிப்பெண்கள் வேறு கொடுக்கிறது..

இதே அநியாயங்களையும் அனாகரீகங்களையும் மையப்படுத்தி, குப்பைதொட்டி , சுடுகாடு, .. என்று பாலா தொடர்வார் என்றால் இயல்பாகவே அவர் எல்லாராலும் தூக்கி எறியப்படுவார்..

எதார்த்தம் என்கிற போர்வையில் இப்படி அசிங்கங்களையும் ஆபாசங்களையும் வன்முறைகளையும் வெளிச்ச்சமாக்கியே காண்பித்து கொண்டு இருப்பாரே யானால் ... பாலா இயல்பாகவே காணாமல்  போய் விடுவார்... 

இப்படி ஒரு அண்ணன் தம்பி.. இவர்களை காதலிப்பதோ அழகழகான கதாநாயகிகள்... கக்கூஸ் கழுவுவது போன்ற கதாநாயகர்களை சித்தரித்து விட்டு அவர்களுக்கு கல்லூரி செல்கிற அழகுப் பெண்களை காதலிகளாக நியமித்திருப்பது .. எதார்த்தமில்லை, அருவருப்பு...

மனசில் பதியாத டப்பா பாடல்கள், பின்னணி இசை...
இளையராஜாவின் வாரிசாகவே தோன்றவில்லை யுவன் ஷங்கர்..
புலிக்கு பிறந்த பூனை போல இருக்கிறது இசையும் பாடல்களும்..

வீட்டிற்கு வந்து குளித்தே ஆக வேண்டும் போல ஓர் நாற்ற உணர்வு மனசெங்கிலும்...  

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...